பக்கம்:தமிழர் வரலாறு (கா.கோவிந்தன்).pdf/458

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சேர அரசர்கள் 45] 'மழை ஒழுக்கறாஅப் பிழையா விளையுள் பழையன் மோகூர் அவயைகம் விளங்க, நான் மொழிக் கோசர் தோன்றி.அன்ன" - - மதுரைக் காஞ்சி : 507 - 509. நான்மொழிக் கோசர் என்பது அக்கோசர், துளு, கன்னடம், தெலுங்கு தமிழ் ஆகிய நான்கு மொழிகளைப் பேசவல்லவர் என்றே பொருள்படும். கோயம்புத்துர் தெருக் களில், இந்நான்கு மொழிகளும் பேசப்படுவதை இன்றும் கேட்கலாம். உரையாசிரியர், "நால்மொழிக் கோசர்" என்பதை மொழி நால் கோசர் எனச்சொல் மாற்றிக் கொண்டு தாங்கள் கூறிய வாய்மையில் வழுவாது நிற்கும் நால்வகைக் கோசர் எனப்பொருள் கூறியுள்ளர், இது, வலிந்து பொருள்கொள்ளப்பட்டதாம். மேலும், கோசர், நால்வகை யினராய் இருந்தனர் என்பது வேறு வகையில் அறியப் டடர்த்து. - - - ஏனைய சேரச் சிறப்பாளர்கள் : பதிற்றுப்பத்து, புகழ்பெற்ற சேரர் வேறு சிலர் பற்றியும் பாடியுள்ளது ; புறநானூறும் மேலும் சிலரைக் குறிப்பிடுகிறது. அவர்கள், பொறையன், மலையன், வானவன், இமயவரம்பன், குட்டுவன், கோதை, மற்றும் வில்லவன் எனும் பட்டப் பெயர்களைக் கொண்டுள்ளனர். அவர்கள் முடியுடை மன்னர்கள் அல்லர், அவர் குறித்துப்பாடும் பாடல்களும், வரலாற்றுச் சிறப்பு குறித்தன அல்ல; வெறும் வாழ்க்கை வரலாற்றுச் சிறப்பு குறித்தனவே; ஆகவே, அக்குறுநிலத் தலைவர்கள், ஈண்டுக் குறிப்பிடத் தேவை இலர்.