பக்கம்:தமிழர் வரலாறு (கா.கோவிந்தன்).pdf/466

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சேர அரசர்கள் 459 அத்தி, துன்னரும் கடுந்திரல் கங்கன், கட்டி, பொன்னணி வல்வில் புன்றுறை என்றாங்கு அன்றவர் குழிஇய அளப்பரும் கட்டுர்ப் பருந்துபடப் பண்ணியப் பழையன் பட்டென". (அகம் : 44) பாடியிருப் பதால், அக்கட்டியைப் பாடிய மாமூலனார், பரனர் பேலும் பெரும் புலவர்களால் பாராட்டப் பெற்ற முவேந்தர் காலத்து முதியவரே அல்லது, கி. பி. ஐந்தாம் நூற்றாண்டிற்குப் பிற்பட்டவர் அல்லர். 8) திதியன் : பரணர் முதலாம் இரவலர்கள், பரிசில் பொருட்களாக எண்ணிலாப் பொன் அணிகளையே பெற்றுக் கொண்ட மகிழ்ச்சியால் புகழ்ந்து பாட, நாள்தோறும் நாட்காலைப் போதிலேயே அரசவைக்கு வந்து வீற்றிருக்கும் விழுச்சிறப்பு உடையவனும், தன் பகைவராம் வேளிரொடு மேற்கொள்ள வேண்டிய போருக்காக, வாளை எப்போதும் உறைகழித்தே வைத்திருக்கும் விழிப்புடையானும் ஆகிய திதியன் என்பான் ஒருவனைப் பாடியுள்ளார் மாமூலனார். "பாணர் ஆர்ப்பப் பலகலம்உதவி நாளவை இருந்த நனைமகிழ் திதியன் வேளிரொடு பொரீஇய கழித்த வாள்' - அகம் : 331. தாம் விளைவித்திருந்த பயற்றை, அன்னி மிஞரிலி என் பாளின் தந்தை காத்திருந்த பசுநிரை மேய்ந்து விட்டது கண்டு சினங்கொண்ட கோசர், அவன் கண்களையே போக்கிவிட்ட ராகச், சினங்கொண்ட அவள், அக்கோசரை அழித்துப் பழிதீர்க்கும் வரை நல்ல உணவு உண்பதோ, நல்லஉடை உடுப்பதோ செய்யேன் என வஞ்சினம் உரைத்து விட்டு, அழுந் துார்த்திதியன் பால்சென்று முறையிட, வீரம் செறிந்த வீரர்கள் நிறைந்த சிறுசிறு காட்டரண்களைக் கொண்டிருந்த வெற்றி வீரனாம் அத்திதியன் அக்கோசர் பலரைக் கொன்று தீர்த்த நிகழ்ச்சியைப் பரணர் பாடியுள்ளார். "பாசிலை அமன்ற பயறு ஆபுக்கென வாய்மொழித் தந்தையைக் கண்களைந்து அருளா 30