பக்கம்:தமிழர் வரலாறு (கா.கோவிந்தன்).pdf/470

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சேர அரசர்கள் 463 கொண்டு, நறவுநொடை நெல்லின் நாண்மகிழ் அயரும், கழல் புனை திருந்தடிக், கள்வர் கோமான் மழபுலம் வனக்கிய மாவண்புல்லி, விழவுடை விழுச்சீர் வேங்கடம்" (அகம் : 61) யானைகள் காட்டகத்தே நின்று அலறக் களிறுகளாம் அவற்றின் கன்றுகளைக் கைப்பற்றிக் கொண்ட உவகையோடு, அவற்றைக் கள்ளின் விலையாகக் கள் விற்கும் மனைகளின் முற்றத்தே பிணிக்கும் வீரர்களைக் கொண்டவன், வேங்கடத்திற்கு உரியவன் புல்லி, ("மடப்பிடி கானத்து அலறக் களிற்றுக் கன்று ஒழித்த உவகையர்-நறவு தொடை நல்லில் புதவு முதல் பிணிக்கும் கல்லா இளையர் பெருமகன் புல்லி, வியன்தலை தன்னாட்டு வேங்கடம்" (அகம் : 83) எனக் கூறுவதன் மூலம், புல்லி குறித்து மாமூலனார் கூறியதை அப்படியே ஏற்றுக் கொண்டுள்ளார் கல்லாடனார். வேங்கட நாட்டில் கொண்ட களிறுகளால் வீறுகொண்ட படையுடையார் பாண்டியர் ("வேங்கடப் பயந்த வெண்கோட்டுயானை மறப்போர்ப் பாண்டியர்" (அகம் : 27) தென்னாட்டகத்தே உள்ள கெளரியர்க்கு உரிய நல்ல நாட்டில், சிறுசிறு காட்டரண்களை அமைத்துக் கொண்டு, பண்டியர் தலைமைக்கும் பணிய மறுத்து வாழ்ந்திருந்த சிற்றரசுகளைக் கள்வர் கோமான் ஏவல் கேட்கும் வீரர் துணையால் வெற்றி கொண்ட தென்னவன். "தெனா அது வெல்போர்க் கெளரியர் நன்னாட்டு உள்ளதை.கள்வர் பெருமகன் ஏவல் இளையர், தலைவன் மேவார் அருங்குறும்பு எறிந்த ஆற்றலொடு பருந்துபடப் பல்செருக் கடந்த செல்லுறழ் தடக்கைக் கொடஅ நல்லிசைத் தென்னவன் (அகம் : 342)) எனக் கூறியதன் மூலம், புல்லிக்கும், பாண்டியர்க்கும் உள்ள நட்புறவினை நாட்டியுள்ளார் மதுரைத் தமிழ்ச்சங்கத் தலைவராம் நக்கீரரைப் பெற்றெடுத்த பெருமைக்குரிய மதுரைக்கணக்காயனார். ஆகப், புல்லியும், அம்மதுரைக் கணக்காயர் காலத்தவனே அல்லது பிற்பட்ட காலத்தவன் அல்லன் என்பது உறுதியாயிற்று.