பக்கம்:தமிழர் வரலாறு (கா.கோவிந்தன்).pdf/475

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

468 தமிழர் வரலாறு "குட்டுவன் அகப்பா அழிய நூறிச் செம்பியன் பகல்தி வேட்ட ஞாட்பு" - நற் : 14. புல்வியின் பல்வேறு சிறப்புகளைக் கூறும் நிலையில் அவற்றோடு இணைத்துப் பாண்டியர் பெருமையையும் கூறிய தோடு அமையாது பாண்டியர்தம் யானைப்படைப் பெருமை ; அப்படையுடைமையால் போர்க்களம் எதுவே ஆயினும், ஆங்கு வெற்றியே பெறும் விழுச்சிறப்பு, உலகம் புகழ் அவர் தம் கொற்கைத்துறை, ஆங்குக் கொட்டிக்கிடக்கும் முத்து, வலம்புரிசங்கு ஆகியவற்றின் பெருமைகளையும் பாராட்டியுள்ளார். "வினைநவில் யானை விறற்போர்ப் பாண்டியன் புகழ்மவி சிறப்பின் கொற்கை முன்துறை அவிர்கதிர் முத்தமொடு வலம்புரி" - அகம் : 201. ஆக, மாமூலனார், மூவேர்தர்களைப் பாடவில்லை என்ற திருவாளர் அய்யங்கார் அவர்கள் காட்டும் காரணத்திலும் உண்மையில்லை என்று தெளிவாகிறது. மோரியரின் தென்னாட்டுப் படையெடுப்பபைக் குறிப்பிட்டிருப்பவர் மாமூலனார் ஒருவர் மட்டும் அல்லர். மேலும் இருவர் குறிப்பிட்டுள்ளனர். ஒருவர், கள்ளில் ஆத்திரையனார்; மற்றொருவர் குமட்டுர்க்கிழார் மகனார் பரங்கொற்றனார். மோரியர் வருகையை, "வென்வேல், விண்பொரு நெடுங் குடைக் கொடித்தேர் மோரியர்" எனப்புறத்தில் (175) குறிப் பிடும் கள்ளில் ஆத்திரையனார், தம்முடைய குறுந்தொகைப் பாட்டு ஒன்றில் "ஆதிஅருமன்” (293) என்பானைக் குறிப் பிட்டுள்ளார். இதே ஆதிஅருமனை, நக்கீரர் நற்றினைப் பாட்டு ஒன்றில் (367) "மூதில் அருமன்” எனக்குறிப் பிட்டுள்ளார். - -