பக்கம்:தமிழர் வரலாறு (கா.கோவிந்தன்).pdf/476

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சேர அரசர்கள் - 469 ஆகவே, மோரியர் வருகையைக் குறிக்கும் கள்ளில் ஆத்திரையனாரும், கடைச்சங்கத்துத் தலைவர்களுள் ஒருவராம் நக்கீரர் காலத்தவர் என்பது உறுதியாகிறது. அதே போல், "விண்பொரு நெடுவரை இயல்தேர் மோரியர்" என மோரியர் வருகையைக் குறிக்கும் பிறிதொரு புலவராம் உமட்டுர்க்கிழார் மகனார் பரங்கொற்றனார். அதே பாட்டில் (அகம் : 69) "அரண்பல நூறி, நன்கலம் தறுஉம் வயவர் பெருமகன் சுடர்மணிப் பெரும்பூண் ஆஅய்" என ஆயையும் பாராட்டியுள்ளார். இந்த ஆயைப் பாடிய புலவர் பல்லோருள் பரணரும் ஒருவர். "சென்றோர்க்குச் சாலவிழ் நெடுங்குழி நிறைய வீகம் மாஅல் யானை ஆய்கானம்" (அகம் :152), "ஆஅய் நன்னாட்டு அணங்குடைச் சிலம்பு" (அகம் : 198), ஆகவே, மோரியர் வருகைகூறும், உமட்டுர்க்கிழார் மகனார் பெருங்கொற்றனாரும், பரணர்காலமாம் கடைச் சங்கக் காலத்தவர் என்பது உறுதியாயிற்று. ஆக, மோரியர் வருகையைக் குறிப்பிடும் மாமூலனார், கடைச்சங்க காலப் புலவரே அல்லது, கி. பி. ஐந்தாம் நூற்றாண்டிற்கும் பிற்பட்டவரல்லர் என்பது இவ்வகையாலும் உறுதி செய்யப்படுகிறது. மோரியர் வருகையைக் குறிப்பிடும் இரண்டு இடங்களில், ஓரிடத்தில் மாமூலனார், அம்மோரியரை, "வம்பமோரியர்" (அகம் : 251) எனக்குறிப்பிட்டுள்ளார். "வம்பமோரியர்" என்ற தொடருக்குத் திரு. அய்யங்கார் -gaufogir Lou Guomifiluff ("Moriyar, who newly came Page : 520) எனப் பொருள் கொண்டு, "ஈண்டு மெளரியர் எனக் குறிப்பிடப்பட்டிருப்பவர், பாடலிபுத்திரத்தை ஆண்ட மெளரியர் இனத்து வழிவந்த ஒரு கிளையனராய்க் கி. பி. 597-இல் அரசாண்டிருந்த சாளுக்கிய இனத்து முதலாம் கீர்த்தி வர்மனின் பகைவர்களாக இருந்தவராதலே வேண்டும். கோசர் தொடர்போடு, தமிழ்நாட்டில் படையெடுத்தவர், மோரியருள், இந்தப் பிற்கால மோரியர் ஆதலே இயலக்கூடிய పోు. [The Mauryas, perhaps, the descendants of some branch