பக்கம்:தமிழர் வரலாறு (கா.கோவிந்தன்).pdf/483

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

16. பழைய அரச இனங்கள் ஒளிகுன்றல் கடைசி, பாண்டிய சோழ அரசர்கள் : இறையனார் அகப்பொருள் உரையாசிரியர், தமிழ்ச் சங்கம் நிறுவிய உக்கிரப் பெருவழுதியைப் பாண்டியர்களில் கடைசி அரசனாகக் கொண்டது, குறிப்பிடத்தக்கது, தொடர்ந்து வந்துகொண்டிருந்த பண்டைய பாண்டியர் வழியை, ஏதோ சில அவப்பேறு துண்டித்து விட்டது என்பதை, இதிலிருந்து உய்த்துணர்ந்து கொள்ளலாம். புறநானூறு 367 ஆம் எண் செய்யுளுக்கு இணைத்திருக்கும் கொளுவின்படி இராசசூயம் வேட்ட பெருநற்கிள்ளி, இவ்வுக்கிரப் பெருவழுதியின் நண்பனாவன். இந்த அரசர்களின் காலத்திற்குப் பிறகு பாடிய புலவர்களெல்லாம், சிறு பாணாற்றுப் படை ஆசிரியரைப் போலவே, பாண்டிய அல்லது சோழ அரசர்களைப் பாராட்டிப் பாடாமல், இப்பழைய அரச இனங்களின், வீழ்ச்சிக்குப் பின்னர்ப் பெருமை பெற்ற குறுநிலத் தலைவர்களையே பாடியுள்ளனர். ஆதலாலும், சோழ பாண்டிய அரசர்களைக் குறிப்பிடும் போதும், கலித் தொகை பாடிய புலவர்களைப் போலவே, ஆளும் அரசர்களைப் பெயர் சுட்டிக்குறிப்பிடாமல், பொதுவாகவே குறிப் பிட்டுள்ளனர். ஆதலாலும், இப்பெருநற்கிள்ளியோடு சோழ அரசு இனத்து வழியும், பெரும்பாலும் இடையறவு பட்டிருக்க வேண்டும். ஆகவே, இவ்விரு அரசர்கள் காலத்தில், இப்பழம் பெரும் அரச இனங்களின் செல்வாக்குச் சிறப்பில், ஏதோ ஒரு நிலைகுலைவு ஏறபட்டிருக்க வேண்டும் என நம்பலாம்.