பக்கம்:தமிழர் வரலாறு (கா.கோவிந்தன்).pdf/489

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

482. - - தமிழர் வரலாறு என்ற பிறிதொரு பாடபேதச்சொல்லையே நான் கொண்டுள்ளேன். - தமிழ் இலக்கியத்தில், பழைய களப்ப அரசர்களும், குறிப்பிடத்தக்க அண்மைக்காலம் வரை களப்ப மரபினரும் இருந்தமை பற்றிய குறிப்பு இருக்கிறது. பதின்மூன்றாம் நூற்றாண்டில், இக்காலச் சைவ சமய நெறிகண்ட மெய் கண்ட தேவரின் தந்தையார் அச்சுத களப்பாளர் என அழைக்கப்பட்டுள்ளார். இவ்வுண்மை, என் கருத்தைக் களப்பான இனத்தின் மீது போக்கிப் புத்ததத்தர் கூறும் அச்சுதகளப்பன், இந்தத் தமிழ் இனத்தைச் சார்ந்தவன் எனக் குறிப்பிடச் செய்தது. தமிழ் நாவலர் சரிதையில் அதிகாரம் 22-இல் தமிழ் நாவலர் வரலாறு குறித்துக் குறிப்பிட்டுள்ளேன். வரலாறு, சரிதை இரண்டும் ஒரு பொருள் குறித்த இருசொற்களாம் எனினும், தமிழ்நாவலர் சரிதை என்பதே அந்நூலின் வழக்கமான பெயராம்). முதற்பாட்டு சேரனாலும், இரண்டாம் பாட்டு, சோழனாலும், ஏனைய இரண்டும் பாண்டியனாலும் பாடப்பெற்ற நான்கு வெண்பாக்கள் உள்ளன. அப்பாக்களின் அடியில் கொடுக்கப்பட்டிருக்கும் கொளுக்களின்படி, அம்மூவரும் அச்சுதகளப்பாளனால் விலங்கிடப்பட்ட வராவர். முதல்பாட்டு, "தினை விதைத்துப் பயிர் செய்தவர் முற்றங்களில் தினை உலரும்; செந்நெல் விளைத்துப் பயிர்செய்தார் முற்றங்களில் செந்நெல் உலரும்; போர்முரசும் சங்கும் ஒலிக்கும், அச்சுதன் முற்றத்தில் பெரிய தேர்ப்படையுடையராகிய அச்சுதனின் பகையரசர் இருந்து உலர்வர்” என்கிறது. "தினைவிளைத்தார் முற்றம் தினைஉணங்கும் , செந்நெல் தனைவிளைத்தார் முற்றம் அதுதானாம்-கனைசீர் முரசுணங்கச் சங்கு உணங்கும் மூரித்தேர்த்தானை அரசு உணங்கும் அச்சுதன் முற்றத்து.” சோழனால் பாடப்பெற்ற இரண்டாவது பாடல் இவ்வாறு கூறுகிறது; "அரசர்குல திலகனாகிய அச்சுதனுடைய