பக்கம்:தமிழர் வரலாறு (கா.கோவிந்தன்).pdf/491

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

484 - . - தமிழர் வரலாறு வாழ்வார், அது கீழ்க்கடல் ஒலியோ எனக்கொண்டு அஞ்சி ஆரவாரித்தனர். கீழ்த்திசை வாழ்வார் அது மேலைக்கடல் ஒலியோ எனக்கொண்டு அஞ்சி ஆரவாரித்தனர்." என்கிறது. "குடகர் குணகடல் என்று ஆர்த்தார்; குடநர்க்கு இடவர் குடகடல் என்று ஆர்த்தார் - வடகடல் தென்கடல் என்று ஆர்த்தார் தென்தில்லை அச்சுதா! - . நின்தன் முன் கடை நிற்றார்க்கும் முரசு" - சேர, சோழ, பாண்டியராகிய இவ்வரசர்கள் எல்லாம் திரண்டிருந்த தென்தில்லை, ஆரிய மயமாக்கப்பட்ட அந்நாள் தொட்டுத் தங்கள் முடிசூட்டு விழாவினைச் சோழர்கள் மேற்கொள்ளும் இடம் சிதம்பரமே ஆம். சிதம்பரம் பெரிய கோயில், அக்காலத்தில் தெய்வத்தன்மைக்காகப்புகழ் பெற்று விளங்கியதால், அச்சுதனும், அவ்வழக்கத்தை மேற் கொண்டான் போலும். . - பாண்டியர்கள், கி. பி. ஆறாம் நூற்றாண்டின் இறுதியில் மீண்டும் செல்வாக்கு பெற்றுவிட்டனர் ஆதலாலும், பல்லவர்கள், அந்நூற்றாண்டின் இடைக்காலத்தில் காஞ்சியைக் கைப்பற்றிக் கொண்டனர். ஆதலாலும், தமிழ் நாடு முழுமைக்கும் பேரரசனான ஒரு களப்பாளனுக்குக் கி. பி. 450க்கும் 550க்கும் இடைப்பட்ட காலத்தில்தான் இடம் காண முடியும். ஆகவே, இந்த அச்சுத களப்பாளன், புத்ததத்தர் கூறும் அச்சுத் களப்பாளனே ஆதல் வேண்டும். ஒரே அரசன் சைவ, பெளத்த, சமண சமயங்களைப் புரந்திருக்க முடியாது என்றும், தில்லைச் சிவன் கோயிலில் முடிசூட்டு விழா மேற்கொண்டு, சோழநாட்டில் புத்த விகாரங்களை ஆதரிப்பதும், மதுரையில் திராவிட சமண சங்கத்தை ஆதரிப்பதும் செய்ய இயலாது என்றும் கூறும் தடை மதிக்கத்தக்க தடையாகாது. தென்இந்தியாவில், ஆரிய சமயங்கள் பரவத்தொடங்கிய பழங்காலத்தில், அவர் களிடையே புறச்சமயவெறுப்பு சிறிதளவே குடி கொண்டிருந்தது. புறச்சமய வெறுப்பு முதன்முதலில்