பக்கம்:தமிழர் வரலாறு (கா.கோவிந்தன்).pdf/492

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பழைய அரச இனங்கள் ஒளிகுன்றல் 485 தலைதூக்கிய கி. பி. 600க்குப் பிறகே அவர்கள் சண்டை தொடங்கலாயிற்று. மகேந்திர விக்ரம பல்லவன் சமணர் களுக்கும், சிவனுக்கும், விஷ்ணுவுக்கும், திரிமூர்த்திக்கும் கற்கோயில்கள் கட்டினான். அவனுடைய காலத்தில்தான். சமணர்களுக்கும் சைவர்களுக்கும் இடையில் எழுந்த முதல்வாய்ச்சண்டையினைக் கேட்கிறோம். ஒரு நூற்றாண் டிற்குப் பின்னர், வைஷ்ணவர்கள், சைவர்களை எள்ளி நகையாடுவதையும் சைவர்கள், விஷ்ணுவை மதிக்காது பழிப்பதையும் நாம் காணுகிறோம். ஆனால் கி. பி. 600க்கு முன்னர், ஆரியச் சமயநெறி நிற்போர், செல்வாக்கும் பெறத்தொடங்கியபோது, அவர்கள் ஒருவரையொருவர் எதிர்ப்பதை நாம் கேட்கவில்லை. ஆகவே, அச்சுதகளப் பாலனும், அச்சுதகளப்பனும் ஒருவரே என எடுத்துக் கொள்ளலாம். - 23வது அதிகாரத்தில் ஆராயப் பெற்ற கேள்விக்குடி செப்பேடு, களப்ரன் அதாவது, களப்ரா வழிவந்தவன் என்ற கொடுங்கோல் அரசன் ஒருவன் பல அதிராஜாக்களையும், பழையதமிழ் அரசர்களையும் வென்று, ஏனைய தமிழ் மாவட்டங்கள் அல்லாமல் மதுரையிலும் தன் ஆட்சியை நிறுவினான் எனக்கூறுகிறது. பாலிமொழி, "களப்ஹ", சமஸ்கிருதத்தில் "கலப்ர" என முறையாகத் திரியும் ஆதலின், வேள்விக்குடிச்செப்பேட்டின் களப்ர அரசன், அச்சுத களப்பன், மற்றும் அச்சுத களப்பாளனே ஆவன் என்பது தானே பெறப்படும். தமிழ்நாட்டினைத் தன் ஆட்சிக் கீழ்க் கொண்டு வருவது முழுமை பெற்றுவிட்டது எனக் கூறப்படும் நிலையிருந்தாலும், பழைய தமிழ் அரச இனங்கள், வேரொடு கல்லி எறியப்பட்டு விடவில்லை. பாண்டியர்கள், கடுங்கோன் ஆட்சியின் கீழ், கி. பி. 600-இல், தம் பெருமையை மீண்டும் நிலநாட்டிக் கொண்டனர்; சேர, சோழ, பாண்டியர் மற்றும் களப்பிரர், இரண்டு நூற்றாண்டு வரை, பல்வேறு கல்வெட்டுகளிலும், செப்புப்பட்டயங்களிலும், முதலில் பல்லவரின் பகைவர்களாகவும், பின்னர்ச் சாளுக்கியர் பகைவர்களாகவும் குறிப்பிடப்பட்டுள்ளனர்.