பக்கம்:தமிழர் வரலாறு (கா.கோவிந்தன்).pdf/50

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

42 - தமிழர் வரலாறு ("தநைவ் ஆன்த் ராம்ஸ்க, புண்ட்ராம்ஸ்க, சொலான், பாண்டயான், ககொலான்” (கிஷ்கிந்தா காண்டம் 41 : 2) மேற்கே அனுப்பிய படைக்குக் கட்டளைகள் இடும்போது மலபார்க்கடற்கரையைச் சேர்ந்த மிகப் பழைய பெரிய துறைமுகமான முசிரியாம், முரசீபட்டணத்தைக் குறிப்பிட்டுள்ளார் (கிஷ்கிந்தாகாண்டம் : 42 : 13) இப்பகுதிகளையும் மேலே கூறிய பகுதியையும் திருவாளர் கிரிப்த் (Grith) அவர்களின் இராமாயணத்தில் மொழி பெயர்க்கப்படவில்லை. (ஆகவே வடஇந்திய, திருத்தப்பட்ட பதிப்பில் அவை காணப்படவில்லை என்று எண்ணுகிறேன்) இவ்விரு குறியீடுகளும், உண்மையில், இராமாயணத்தைச் சேர்ந்தவையாயின், அவை அப்பாடலின் தொடக்ககால வரைவைச் சேர்ந்தனவாக இருக்க முடியாது. "முத்தாலும் பொன்னாலும் அணிசெய்யப்பட்ட பாண்டியர் பொன் வாயில்களைப் பெருங்கடலின் கரைக்கண் காண்பீர்” எனத், தன்னுடைய வானரக் கூட்டத்திற்குச் சுக்கிரீவன் ஆணையிடுவது இடம் பெற்றிருக்கும், திருத்தப்பட்ட எல்லா மறுபதிப்புகளிலும் காணப்படும். பாண்டியர் பற்றிய குறிப்புகளும் இத்தகையவே. ("ததொ ஹெமமயம் திவ்யம முக்தாமணி விப்ஹஅவிதம் / யுக்தம் கவாடம் பாண்டியனாம் கதாத்ரக்ஷியத வானராஹ்) திருவாளர் கோவிந்தராசன் என்ற ஒரு தமிழர் இப்பகுதிக்கு உரை கூறும்போது, கவாடம் என்பது, அப்பெயர் தாங்கிய ஒரு நகரத்தைக் குறிப்பதாக விளக்கம் அளித்துள்ளார். திருவாளர் கோவிந்தராசன் அவர்கள், கவாடபுரம், பாண்டியரின் பண்டைத் தலைநகராகும் என்ற காதுவழித் தமிழ்க் கதை கேட்டு, அவ்வாறு கேட்டு அறிந்ததைத் தம் உரையுள் கொண்டு வந்து இருக்க வேண்டும். அத்தமிழ்க் கதைதானும், தமிழ் இலக்கியங்களில் மிகவும் பிற்பட்ட காலத்தைச் சேர்ந்தது. இராமாயணத்து இப்பகுதியைத் தவறாகப் பொருள் கொண்டதன் விளைவாகக் கட்டிவிடப்பட்ட கதையாகவும் இருக்கக் கூடும்) இராமாயணக் கதையின் பொதுவான கதைப் போக்கு, கோதாவரிக்குத் தெற்கில், தங்கள் தங்களுக்கெனத் தனித் தனி தலைவர்களைக் கொண்ட வாணரங்களுக்கு