பக்கம்:தமிழர் வரலாறு (கா.கோவிந்தன்).pdf/52

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

44 தமிழர் வரலாறு இருபது தலைமுறைகளுக்குச் சிறிது அதிக காலம் முன் வாழ்ந்திருந்த காசி நாட்டு அரசன், அலர்கா என்பவனின் சமகாலத்தவராவர். ஆக, நனிமிகப் பழங்காலத்து அகத்தியர், விந்தியத்திற்கு மிக மிக அணித்தான பகுதியில் வாழந்தி ருந்தார். இது, அகத்தியர், விந்தியத்தின் முடியை நசுக்கித், தாம் தெற்கிலிருந்து திரும்பும் வரை தாழ்ந்தே இருக்குமாறு ஆணையிட்டார் என்ற கட்டுக்கதையின் பொருளாதல் காட்டும். அவருடைய ஆஸ்ரமம், சாத்புரா மலைத்தொடரின் மேற்குப் பகுதியாகிய வைடூரிய மலைக்கு அருகில் இருந்ததாகத் தெரிகிறது. அவர், தென்பால் நாடுகளைத், தம்முடைய தவநெறியால், முழுக்க முழுக்கக் காப்புடையதாக ஆக்கினார். ஆனால், பஞ்சவடியிலிருந்து இரண்டு யோசனை தொலைவில் இராமன் சந்தித்த அகத்தியர், இராமனுக்கு நானூறு ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்த முதல் அகத்தியராக இருக்க முடியாது. பிற்பட்ட அகத்தியர்களில் ஒருவராகவே இருக்க வேண்டும், இராமர் காலத்தவராகிய இந்த அகத்தியர் தெற்கு நோக்கிச் செல்லும் இராமன் தங்கியிருந்த தவக்குடில் அருகில் இருந்த கோதாவரிக்கு அருகில் வாழ்ந்திருந்தார். அவன் தன் மனைவி சீதையோடு, தன்னுடைய புஷ்பகத் தேரில் திரும்பி வரும், வடக்கு நோக்கிய பயணத்தின் போதும் அவர் தவக்குடிலாக, அது, தொடர்ந்து இருந்தது. ஆகவே அகத்தியர் தவக்குடில், இராமன் காட்டில் அலைந்து கொண்டிருந்த காலம் முழுவதும் பஞ்சவடிக்கு, இரண்டு யோசனை தொலைவிலேயே இருந்தது. என்றாலும் கூடத் சீதையைத் தேடுமாறு, தன் வானரங்களைத் தெற்கே அனுப்பியபோது, சுக்ரீவன், "தெய்வத்தன்மை வாய்ந்த, நோய் தவிர்க்கவல்ல, தெளிந்து ஒளிவீசும், பெருமை வாய்ந்ததும், அப்ஸ்ர மகளிர் அடிக்கடி வந்து நீராடிச்செல்வதும், ஆகிய நீரினை உடைய காவிரி ஆற்றைக் காண்பீர்கள்" எனக் கூறி அனுப்பினான் ("ததஸ்தாம் ஆபகாம் திவ்யாம் ப்ரஸ்ன்ன ஸலிலாம் ஸ்வாம்) தத்ர த்ரக்ஷ்யத்ஹ காவெரீம் விஹிதாம் அப்ஸ்லோசன இஹ திஸ்யாஸினாம் நகஸ்யாக்ரெ மலயஸ்ய, மஹ ஹெள ஜஸ்ாம் / த்ரக்ஷத் ஹாதித்ய சங்காளபம் அகஸ்த்யாம்ர்ஷித்தமம்" இராமாயணம் வி. 41:15:16) ஈண்டு,