பக்கம்:தமிழர் வரலாறு (கா.கோவிந்தன்).pdf/57

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இராமனும் தென் இந்தியாவும் 49 வை ஹரீஸ்வர / ஸ்வ்யம் ஸ்வயம்ப் ஹஅனா தத்த வரதானம் ய்த்ஹா மம / யதா த்வாம்வானரஹ் கஸிசித் விக்ரமாத் வலம் ஆண்யெத் / ததா த்வயா விஜ்ஜெயம் ரக்ஸ்ஸாம் ப்ஹயமாகதம். ராமாயணம் : 5 : 3 : 45-47) தென் இந்தியச் சிற்றுரர்கள் ஒவ்வொன்றும், குறிப்பாகக், கல்வி செல்வ நிலைகளில் தாழ்ந்திருப்போரால் வழிபடப்படுவதும், உயர்சாதியினரால், சிறந்த தாய்க்கடவுளாம் துர்க்கையின் பல்வேறு உருவெளிப்பாடுகளாகக் கருதப்படுவதும் ஆகிய எல்லை யம்மன் என்ற எல்லைக்காவல் தெய்வம் ஒன்றை இன்றும் கொண்டுள்ளன. * * * * தலைநகருள் நுழையும் அனுமான், களிப்பூட்டும் காட்சி அரங்குகளுக்கிடையே "தாருபர்வத்ம்' அல்லது பட்டுப் போன மரத்துண்டுகளின் குன்று நிகர் குவியல்களைக் கண்டான். திரு. ராமதாஸ் பந்துலு அவர்கள், "விசாகப்பட்டிணம் மாவட்டத்தின் சமஸ்தானச் சிறு நிலப்பரப்புகளில், தாரு என்ற சொல், எரிபொருள் எனும் பொருள் தருவதாக உணரப்படுகிறது. எரிபொருள்கள், சிறு குன்றுகள் போலவும் கோயில் கோபுரங்கள் போலவும் சேர்த்து வைக்கப்படுவன, எங்கும் காணக்கூடியவை. இம் மலைப்பகுதிகளில், மழை, மிகப் பெருமளவில் பெய்யு மாதலால், காய்ந்த சிறு மரத்துண்டும் கிடைக்காத போது, அப் பருவவிளைவுக்கு எதிராக, அவைபோலும் பெரும் போர்கள் தேவையாகிவிட்டன. அனுமான் இலங்கைக்கு மாரிக்காலம் கழித்துச் சென்றான், ஆதலின், வானரத் தூதுவன், இராவணன் வாழிடத்திற்கு அணித்தாக, இவை போலும், மரக்குவியல்களைக் கண்ணுற்றதில், வியப்பேதும் இல்லை. (இராமாயணம் 5 : 6:36) - திரு. ராமதாஸ் பந்துலு அவர்கள் குறிப்பிடும் மற்றொரு கூற்றும் ஈண்டுக் குறிப்பிடத்தக்கது, "இராவணன் போருக்குச் சென்றபோது, புலி, குதிரை, ஒட்டகம், கலைமான் போலும் முகங்களையுடைய சிலவும் உடன் சென்றன. (யஸ்னகவ நா நா வித்ஹக்ஹொர நலிபர் வியாக்ஹரொ ஹ்ஷ்ர நாகெந்த்ர