பக்கம்:தமிழர் வரலாறு (கா.கோவிந்தன்).pdf/60

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

52 - தமிழர் வரலாறு "ராக்ஷ லென்த்ஹ் ப்ரதாபவான்" என்ற தொடரில் இணைத்திருப்பது போன்றதே ஆகும். இந்த மூன்று எடுத்துக்காட்டுகளிலும் இராவணன் "ப்ரதாபம்" அல்லது புகழ் அச்சொல்லின் முன் இணைக்கப்படும் சொற்களா லேயே உணர்த்தப்படுகிறது. கடைசித் தொடரின் பொருள் : "ராக்ஷதர்களுக்கு அரசன் என்ற புகழை இராவணன் பெற்றுளான்” எனும் பொருளுணர்த்துகிறது. ஆகவே, அத்தொடரின் பொருள் தெளிவாகவே உளது. ஆனால், இராவணன் எந்தெந்த வகையில் புகழ்பெற்றவன் என்பதை உணர்ந்து கொண்டாலல்லது, முதல் இரு தொடர்களின் பொருளை அறிவது இயலாது. அரக்கர் தலைவனின் புகழ். ராவனொ - லொக - ராவஹஹ். ராவனொ - ஸ்த்ரு ராவன்அஹ். யென வித்ரஸித-லொக-ஸ்ஸதெவ் ஆஸுர-பற்றக்அஹ் லொக க்ஷொப் ஹயிதாரம்க நாதை ர்ப்ஹஅதவிராவினம்" என்ற தொடர்களில் வெளிப்படுகின்றன. அவன் உலகங் களைத் தொல்லைக்கு உள்ளாக்கினான். பகைவர்களைத் தொல்லைக்கு உள்ளாக்கினான். கடவுள் உலகிற்கும் அசுரர் களுக்கும் பன்னர்களுக்கும் பேரச்சம் ஊட்டினான். உலகைத் துன்புறுத்தி ஆங்கு வாழ்பவரைத் தன் குரலால் அச்சுறுத்தினான். இராவணனுடைய சிறந்த புகழெல்லாம் ஒவ்வொரு வருக்கும் தொல்லை விளைவிப்பதிலேயே அடங்கியிருந்தது என்பதை இவை காட்டுகின்றன. "தஸ்க்ரீவஹ ப்ரதாபவன்" என்பதன் பொருள் தொடக்கத்தில் தொல்லை தரும் அல்லது இன்னல் தரும் புகழுடையான் என்பதாம். "தாஸஸ்ய" என்பதும் நிச்சயமாக அதே பொருளையுடையதுதான். 'ஸ்' அல்லது அஸி என்பது, கூயி மொழியில் இடம்பெயர் விகுதி ஆகும். மூலச் சொல்லாகிய "தஸாஸி" அல்லது "தஸாஸ்" சமஸ்கிருதத்தில் "தஸாஸ்ய" என எளிதில் ஆகிவிடும். இராவணன் ஒரு "தஸாஸி" அதாவது அல்லல் உறுத்தும் ஒரு மனிதன். -