பக்கம்:தமிழர் வரலாறு (கா.கோவிந்தன்).pdf/62

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

54 தமிழர் வரலாறு செல்வாக்குப் பெற்றிருக்க மாட்டா, என்பது உறுதி. இந்த இராவணன்கள், தென்னிந்தியா முழுமையும் தன்னேரில்லா அரசியல் செல்வாக்குப் பெற்றிருந்தனர். கோதாவரி ஆற்றங்கரையிலானதான ஜானஸ்தானம், மூன்றாவது இராவணன் காலத்தில், அவன் ஆட்சியின் எல்லைக் காவல் நிலையமாக இருந்தது. அவன் குடிமக்களாம் அரக்கர்கள், விந்தியத்தின் தென்பால் உள்ள இந்தியா முழுவதும் திரண்டு கிடந்தனர். ஒரு சிலர், அவ்வப்போது ஆரிய வர்த்தத்துள்ளும் புகுந்து வாழ்ந்தனர். அவன் ஆட்சி நிலவும் எல்லைக்குள், வேறு அரச இனங்கள், ஆட்சி மேற்கொண்டிருந்தன என்பது நடந்திருக்க இயலாத ஒன்று. அக் காலத்தில், சேர, சோழ, பாண்டியப் பழங்குடியினர் இருந்திருக்க இயலும். ஆனால், அக் குடிகளிலிருந்து தோன்றிய அரச இனங்கள் இருந்திருக்க gusong. "A probably political, consequence of the pacification of South India by Rama was, we may presume, the rise of the three great royal dynasties fo sola, sera, and pandya. Though these names occur in the Ramayana, it is certain, that the dynasties could not have flourished in the ages, when the three Ravana's that are mentioned in the, Puranas ruled. These Ravanas apparently wielded unresticted sway all over South India. Janasthana, on the bank of the Godavari, was one of the outposts of the latest Ravana. His subject swarmed all south of the Vindhyas and stray bodies of them, frequently entered Aryavartha, within the boundaries of this realm, it was not possible for other dynasties to rule. The three tribes, solas, seras, Pandyas perhaps existed at time; but the royal dynasties that rose out of them did not" (History fo the Tamils, Page : 85) தமிழ் அரச இனங்கள் மூன்றும், தென்னிந்தியா, பூனி ராமனால் அமைதியுறப் பெற்ற பின்னர், ஆட்சிக்கு வந்திருக்க வேண்டும் என நான் கருதுகின்றேன். - (“I have assumed that the three Tamil dynasties rose to power after the pacification of South India by Sri. Rama" Page : 150) இதற்கு ஆதாரமாக அவர் காட்டும் காரணங்கள் பின் வருவன : -