பக்கம்:தமிழர் வரலாறு (கா.கோவிந்தன்).pdf/64

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

56 தமிழர் வரலாறு இனி இக்காரணங்களின் வன்மைமென்மைகளைக் காண்போம். கோதாவரிக்குத் தென்பால் உள்ள அனைத்து இந்தியாவும் இராவணன் ஆட்சிக்கு உட்பட்டிருந்தது எனக் கூறும் திருவாளர் பி. டி. எஸ். அவர்கள், தம்முடைய இம் முடிவினை உறுதி செய்யவல்ல ஒரு சான்றினையேனும் காட்டினாரல்லர். மேலும், அரக்கர் நடமாட்டம் கோதாவரிக்கும் தென்பால் மட்டும் அன்று, அதற்கு வடக்கிலும், ஏன்? விந்தியத்திற்கு வடக்கிலும் கூட இருந்தது. இதைப் பி. டி. எஸ். அவர்களும் ஒப்புக் கொண்டுள்ளார். "கோதாவரிக்கு வடக்கில் எண்ணற்ற ஆரிய அரசுகள் நிறுவப்பெற்றிருந்தன. ஆனால், விந்தியத் திற்கு அப்பாலும் வந்து தொல்லை தரும் அரக்கர்களை அடக்க, அவர்களால் முடியவில்லை. விசுவாமித்திரரோடு, அப்பகுதிக்கு வந்த இராமன், விந்தியத்திற்கு வடக்கிலும், நுழைந்து தொல்லை கொடுத்த தாடகை, அவள் மகன் மாரீசன் சுபாகு ஆகியோருடன் போரிட வேண்டியிருந்தது" ←Ꮁ☾Ꮡ£ அவர் கூறுவது காண்க. "North of the Godavari a number of Aryan Kingdoms had been established. But they were not powerful enough to check the incursions of Yakkas and Raksasas into the regions, beyond the Vindhyas. For when Rama visited these regions along with Viswamitra to guard the latter's sacrifices from being disturbed by Raksasas, he had to fight with the yaksini Tataka, Marica her sow and Subahu, who three had stayed north of the Vindhyas" (Page : 49) இங்கெல்லாம் அரக்கர் நடமாட்டம் இருந்தது என்றால், அங்கெல்லாம் அவர் ஆட்சி அல்லது அவர்கள் தலைவனாம் இராவணன் ஆட்சி இருந்தது எனக் கொண்டுவிடக் கூடாது. தங்கள் நாடாம் இலங்கை விடுத்து, அவ்வப்போது வெளியேறித் தாம் விரும்பும் அவ்விடங்களில் சில காலம் தங்கி, ஆங்கிருந்த முனிவர்களுக்கும் அவர் தம் வேள்விகளுக்கும் தொல்லை கொடுத்து வந்தனர் எனக் கொள்ள வேண்டுமே ஒழிய, அவர்கள் அங்கேயே நிலைத்த குடியினராய் வாழ்ந்திருந்தனர் எனல் பொருந்தாது.