பக்கம்:தமிழர் வரலாறு (கா.கோவிந்தன்).pdf/66

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

58 १ - தமிழர் வரலாறு மலைக்கல்லும், மரக்கிளையும் தவிர்த்து வேறு படைக்கலமோ, வானரக் கூட்டம் தவிர்த்து வேறு படைப்பிரிவோ பெறாத, ஒரு வானரத் தலைவன் நாடு இருந்ததைத் தாங்கிக் கொண்டவன், வில், வாள், வேல் போலும் படைக்கலன்களும், தேர், யானை, குதிரை, வீரர் என்ற நாற்படையும் கொண்ட பாண்டியர் நாடு இருந்ததைத் தாங்கிக் கொண்டிருந்திருக்க மாட்டான் என்பது ஏற்கக் கூடிய வாதம் அன்று. 3. இராமாயணம் நடைபெற்ற அந்நாட்களில் பாண்டியர்கள் ஆட்சியாளராக இருந்திருப்பின், அவர்கள் இராமனுக்கும் இராவணனுக்கும் நடைபெற்ற போரில் எந்தப் பக்கத்திலும் சேர்ந்திருந்தாரல்லர் என்பது நம்பக் கூடாத ஒன்று என்ற வாதத்திலும் வலுவில்லை. இந்தியாவின் தென்கோடி நாட்டவராம் சேர சோழ பாண்டியர் வடகோடிக்குச் சென்று குருச்சேத்திரப் பெரும் போரில் பாண்டவர்க்குத் துணை நின்று போரிட்டனர். சேரர் குலக் காவலன் ஒருவன் இருபக்கத்துப் படையினர்க்கும் போர் முடியுங்காறும் உணவு படைத்தான் என்னும்போது தன் காலடிக்கண்ணதாகிய இலங்கையில் இராமாயணப் போர் நடைபெற்றிருக்கும்போது, பாண்டியர் இருந்திருந்தால், அப்போரில் பங்கு கொள்ளாது இருந்திருப்பாரா என்பது முறையான கேள்விதான். பாரதப் போரில் பாண்டவர் துரியோதனாதியர் ஆகிய இருவருமே தங்களுக்குப் படைத்துணை அளிக்குமாறு அரசர் பலரையும் அணுகினர். அதனால், சேர சோழ பாண்டியர்கள் மட்டுமல்லாமல் வேறு பல தென்னிந்தியப் பேரரசுகளும் வட இந்திய அனைத்து அரசுகளும் அப்போரில் பங்கு கொண்டன. ஆனால், இராமாயணப் போரின் நிலையே முற்றிலும் வேறுபட்டது. உறங்கிக் கிடந்த உடன்பிறப்பு கும்பகர்ணனைத்தான் எழுப்பிவரப் பணித்தானே அல்லது பிறர் எவர்பாலும் படைத்துணை வேண்டினான் அல்லன் இராவணனும்; அதே போல் இராமனும் யார் மாட்டும் தனக்குப் படைத்துணை வேண்டினானல்லன் படைத்துணை