பக்கம்:தமிழர் வரலாறு (கா.கோவிந்தன்).pdf/67

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இராமனும் தென் இந்தியாவும் 59 வேண்டாதது மட்டும் அன்று, மனையாளை மாற்றான் கவர்ந்து சென்றுவிட்டதைக்கூடக் குரங்கினம் தவிர்த்து வேறு யாருக்கும் அறிவித்தான் அல்லன்; அறிவித்திருந்தால் பாண்டியர் மட்டும் அன்று பன்னாட்டுக் காவலரும் அவன் அழைக்காமலே அவனுக்குப் படைத்துணையாகச் சென்றிருப்பர். செய்தி அறிந்திருந்தால் "ஏழைமை வேடன் இறந்திலன்" எனச் செம்மாந்து கூறும் குகன் துணைக்கு வாராது இருந்திருப்பானா? அயோத்தி நாட்டுப் பெரும் படையோடு பரத சத்ருக்கனர் சென்றிருக்க மாட்டாரா? கோசல நாட்டுக் கோமகன் சென்றிருக்க மாட்டானா? கேகய நாட்டுக் காவலன் தான் கேளாக் காதனாக இருந்திருப்பானா? ஆனால், இராமாயணப் போரில் பாண்டியர் மட்டுமே பங்கு கொள்ளத் தவறிவிட்டவர் அல்லர். மேலே கூறிய இவர்களில் யாரும் பங்குகொள்ள வில்லை. என்ன காரணம்? இராமன், "கூட்டு ஒருவரையும் வேண்டாக் கொற்றவன்" மேலும் தன் மனையாளைக் கவர்ந்து சென்றானைக் கொன்று தன் மனையாளை மீட்கும் முயற்சி முழுக்க முழுக்க தன்னுடையதாகவே இருத்தல் வேண்டும், பிறர் துணை நாடுவது பேடித்தனம் என்ற உரம் வாய்ந்த உள்ளம் உடையவன். அதனால் தனித்தே நின்று போரிட்டான். ஆக, இராமாயணப் போரில் பாண்டி நாட்டவரல்லாத பிற நாட்டவர் அனைவரும் பங்கு கொண்டது போலவும் பாண்டியர் மட்டுமே பங்கு கொள்ளவில்லை என்பது போலவும் கொண்டு அது காரணம் காட்டி அப்போது பாண்டியரே இல்லை எனக் கொள்ளும் முடிவு தருக்க நெறியோடு பொருந்தாப் போலி முடிவாகும். 4. இராமன், இலங்கை மீது படையெடுக்கத் தொடங்கியது பாண்டி நாட்டுக் கடற்கரையிலிருந்து, கடலைக் கடக்கக் கட்டிய பாலத்தின் தொடக்கம் பாண்டி நாட்டுக் கடற்கரையிலிருந்து, அந்நாட்களில் அப்பகுதியில் பாண்டிய ஆட்சி நடைபெற்றிருந்திருக்குமாயின், அப்பகுதி பாண்டி நாட்டுக்கு உரியதாக வால்மிகத்தில் குறிப்பிடப் 5