பக்கம்:தமிழர் வரலாறு (கா.கோவிந்தன்).pdf/74

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4. பாரதப் போர் தமிழ் அரசு இனங்களின் தோற்றம் : தென் இந்தியாவை, இராமன் அமைதிப்படுத்தியதன் அரசியல் விளைவு, சோழ, சேர, பாண்டியப் பேரரசு இனங்களின் தோற்றமாம் எனக் கொள்ளலாம். இராமாயணத்தில், இவ்வரசு இனப் பெயர்கள் இடம் பெற்றிருந்தன் என்றாலும், புராணங்களில் குறிப்பிடப்படும் மூன்று இராவணர்கள் ஆண்ட காலத்தில், இவ்வரசு இனங்கள் பெருவாழ்வு வாழ்ந்திருக்க முடியாது. இது பற்றிய மொழி பெயர்ப்பு ஆசிரியர் கருத்து பின் இணைப்பில் தனியே ஆராயப்பட்டுள்ளது. இந்த இராவணர்கள், தென்னிந்தியா முழுவதும், கட்டுப்பாடற்ற அரசியல் செல்வாக்கினை நாடறியச் செலுத்தி வந்தனர். கோதாவரிக்கரையில் உள்ள ஜனஸ்தானம் கடைசி இராவணனின் புறக்காவல் அரண்களில் ஒன்றாக இருந்தது. அவனுடைய மக்கள் விந்தியத்துக்குத் தெற்கில் உள்ள பகுதிகளில் பெருந்திரளாகக் காணப்பட்டனர். அவர்களில் சிறுசிறு கூட்டத்தவர், ஆரிய வர்த்தத்துள்ளும் அடிக்கடி நுழைந்தனர். அவன் ஆட்சி நிலவும் எல்லைக்குள், பிற அரச இனங்கள் ஆட்சி செலுத்துவது இயலாது. அந்நாட்களில் சோழ, சேர, பாண்டிய பழங்குடிகள் இருந்திருக்கக்கூடும். ஆனால், அவற்றிலிருந்து எழுந்த அரச இனங்கள் இருந்திருக்கா. பிற்காலத்திய தென் இந்திய மரபு வழிச் செய்திகள் அவர்களை உலகம் தோன்றிய நாள் தொட்டு ஆள்வோராக ஆக்குகின்றன. "கல்தோன்றி மண் தோன்றாக் காலத்தே, மூன் தோன்றி மூத்த குடி" என்கிறது அது "நினைவுக்கு எட்டாப் பழங்காலத்திலிருந்தது" என்பதே இத்தொடரின் உண்மைப் பொருள். வேறுவகையில் கூறுவதானால், இம் மூவேந்தர்