பக்கம்:தமிழர் வரலாறு (கா.கோவிந்தன்).pdf/76

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

68 - தமிழர் வரலாறு தலைமுறையில் வந்த அதிசிமகிருஷ்ணன் ஆட்சிக்காலத்தில், நைமி சாரணயத்தில் நடைபெற்ற பெரிய வேள்வியின் போது, நெடும் பாட்டாகத் தொகுத்துப் பாடப்பட்டதாக நான் கொள்கிறேன். பழைய அரசியல் நாட்டுப் பாடல்கள், வேள்விகள் நிகழும்போது பாடப்படும் வழக்கத்தால், மக்கள் நினைவில் அழியாமல் வைக்கப்பட்டன. பாரதப்போர் வீரர்களின் வாழ்க்கையைக் கூறும் பாரதத்தின் பகுதி, அப்போர் நிகழ்ந்த காலத்தில் (கி. மு. 1400) அதில் கூறப்பட்டிருக்கும் மக்களும், நிகழ்ச்சிகளின் செயல்பாடும் இருந்தமைக்கான அகச்சான்றாகக் கொள்ளப்படும். 2. கி. மு. 3000இல் நிகழ்ந்திருக்கும் என நான் மதிப்பிடும், சூரிய, சந்திர அரசமரபுகளின் கால்கோள் ஆண்டு முதல், அப்பாரதப் பெரும்போர் நடைபெற்ற ஆண்டு வரையான காலத்தில் அரசர்கள். அவ்வரசர்களின் குடிவழிப் பட்டியல் குறித்த புராணக்கட்டுக் கதைகள், மற்றும் கவிதைகள் இடம் பெற்றுவிட்டன. அப்பாரதப் பெரும்போர் வரையான காலத்தில், ஹெரோடொட்டஸ் (Herodotos) க்கும் விதிவிலக்கு இல்லாமல் மிகப் பழைய வரலாற்று அகச்சான்றுக்ள அனைத்தும் குறித்துச் செய்ய வேண்டுவது போல, வரலாற்று நிகழ்ச்சிகளிலிருந்து, எளிதில் வேறு பிரித்துக் காணக் கூடிய புராண நிகழ்ச்சிகள் சிலவற்றின் இடைச்செருகல்கள் சிலவும் இப்பழங்கதைகளில் உள்ளன. இவ்வரலாற்றுச் செய்திகள், வேதங்களிலும், இராமாயணத்திலும், புராணங்களிலும் காணக்கூடிய வரலாற்றுச் செய்திகளோடு ஒப்புக் காணப்பட வேண்டும். இவை, அரசவைப் பாடகர்களால், நனிமிகப் பழைய காலம் தொட்டுப் பாடப்பட்டு வந்த அரசியல், நாட்டுப் பாடல்களிலிருந்து பெறப்பட்டவை. பர்கிதர் மற்றும், சீதநாத் ப்ரதான் ஆகியோர் வெற்றிகரமாகச் செய்தது போல், இவை துணுக்கமாக ஆராயப்பட்டால், பண்டைய இந்திய வரலாற்றை மீண்டும் வரைவதற்குப் பெருந்துணை அளிக்கவல்லன. மகாபாரதத்தில் இடம்பெற்று உள்ள இவைபோலும் புராணக்கதைகள், மகாபாரதப்டோருக்கு