பக்கம்:தமிழர் வரலாறு (கா.கோவிந்தன்).pdf/79

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாரதப் போர் . . 7] வாய்ந்த வெற்றிச் செயல்களில் (திவ்யாணி கர்மானி), பாண்டியர் வாயில்கள் உடைக்கப்பட்டு, (மகாபாரதம், 7 :11, 398 : 8 : 23 : 1.016 இரண்டாவது குறிப்பில், "பின்ன கபாடே பாண்டியனாம்" என்ற தொடர் வந்துளது. ஈண்டு, “கபாடே." என்பது, உறுதியாக "வாயில்” என்றுதான் பொருள்படும். ஆகவே பக்கம் 53 இல் ஏற்கனவே குறிப்பிடப்பட்டிருக்கும் இராமாயணக் “கபாடம்" என்பதும் வாயிலைத் தான் குறிக்கும். தென் இந்திய உரையாசிரியர்கள் விளக்கம் அளிப்பது போல், கபாடபுரத்தைக் குறிக்காது. பின்னர்ப் பாரதப் போரில், பாண்டியர் பக்கம் இருந்து போரிட்ட சாரங்கத்வஜன் (இது மான் கொடியன் என்பதன் மொழி பெயர்ப்பாதல் ஆகும் தந்தை கொல்லப்பட்ட நிகழ்ச்சியில், கிருஷ்ணன், பாண்டி ராஜாவைத் தோற்கடித்த திகழ்ச்சி இடம் பெற்றுளது. கிருஷ்ணன் சோழர்களோடும் போரிட்டுள்ளான். (மகாபாரதம் 7 : 1. 321), யுதிஷ்டிரர் ராஜ சூய வேள்வி கொண்டாடியபோது, முதல் நடவடிக்கையாகப் போர் அல்லது சமாதானம் மூலம் இந்தியா முழுவதும் தம் மேலாட்சி நிலையை உறுதி செய்துகொள்வது தேவைப்பட்டது. சகாதேவன், திக்விஜயமாகத், தென்னாடு புகுந்து, திராவிடர்களையும், சோழர்களையும், சேரர்களையும் பாண்டியர்களையும் வெற்றி கொண்டான். சோழர்களும் திராவிடர்களும், ஆந்திரர் களைப் போலவே ராஜகு யத்திற்கு வந்திருந்தனர். (மகாபாரதம் : 2 : 52 : 1888), சோழர்களும், பாண்டியர்களும், யுதிஷ்டிரருக்குப் பரிசுகள் கொண்டு வந்தனர் (மகாபாரதம் : 2 : 52 : 1893). பாரதப் பெரும்போர் தொடங்கியபோது, கிருஷ்ணனால் தோற்கடிக்கப்பட்ட பாண்டியராஜாவின் மகன், சாரங்கத்வஜன், படையோடு, யுதிஷ்டிரனுக்குத் துணை வந்தான். மகாபாரதம் : 19:1576, 4 : 50 : 2084. பாடபேதம், இப்பெயரை, சாகர்த்வஜன் எனக் குறிப்பிடுகிறது) கேரளர்களும், சோழர்களும் கூட பாண்டவர் பக்கம் நின்று போரிட்டனர். மகாபாரதம்: 22:45:1893 பாண்டிய அரசன் துரோணர்க்கு எதிராகப் போரிட்டு, அசுவத்தாமானல் கொல்லப்பட்டான் (மகாபாரதம் : 4 : 23 :1019 : 8 : 21 : 81.