பக்கம்:தமிழர் வரலாறு (கா.கோவிந்தன்).pdf/86

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

78 தமிழர் வரலாறு நார்தீர்த்தங்களின் பட்டியலில், பாண்டிய நாட்டுக்குமரி தீர்த்தம் என அழைக்கப்படும், குமரிக்கடல் புனித நீராடுமிடம், முதற்கண் குறிப்பிடப்பட்டுளது. - இத்தீர்த்தம், கன்யாதீர்ததம் என்றும் அழைக்கப்படும். ஆக, இந்தியாவில் தென்கோடிமுனையில், குமரி ஒருத்தி, சிவனை எதிர்நோக்கித் தவம் கிடக்கிறாள் என்ற இப்புராணக் கதை, இக்காலத்தில் உருப்பெற்றதாதல் வேண்டும். நிலக்கோடியைக் குறிப்பிடும் சொல் எதுவும் தமிழில் இல்லை. ஆகவே, இப்புராணக்கதை அல்லது, குமரிமுனை ஒரு புனித இடம் என்பதற்கும் தமிழர்க்கும் இடையில் எவ்விதத் தொடர்பும் இல்லை. ஆக, அப்பெருங்காப்பியம் அளிக்கும் அகச்சான்றுகளிலிருந்து, வட இந்திய ஆரியர்களுக்கும், தமிழர்க்கும் இடையில், மகாபாரதப் போர்க்காலத்தில் நெருக்கமான போக்குவரத்து இருந்து வந்தது என உறுதியாகக் கொள்ளலாம்.