பக்கம்:தமிழர் வரலாறு (கா.கோவிந்தன்).pdf/9

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2 . - தமிழர் வரலாறு தெற்கிற்கும் இடையே, இன்று காணலாகும், பிரிவினைக்கான மூலவேர், கடந்த காலத்தின், எந்த அளவுக்கும் அகழ்ந்து அடையலாகா ஆழத்திற்கும் சென்று ஊடுருவிக். கிடக்குமாதலின், வடக்கிற்கும்-தெற்கிற்கும் இடையே, அந்நனி மிகப் பழங்காலத்தில் நிலவியிருந்த, இயற்கை விளைவித்த, பிரிவினை குறித்த ஆய்வு மேற்கொள்ளுவது, பயன் அளிக்கக்கூடியதே' என்றெல்லாம், மேலும் மேலும் கூறிச் செல்கிறார். "இந்தோ-ஆரிய முன்னோடிகள், தென்னாட்டுக்கு ஊடுருவிச் சென்றது அமைதியான முறையில் ஆகும். அவர்கள் தொடர்பு கொண்ட முக்கியவழி, எக்காலத்தும், கிழக்குக் கடற்கரை வழியே” என்று மேலும் கூறுகிறார். போக்குவரத்து வழித்தடம் பற்றிய திருவாளர் சிமித் அவர்கள் கூறிய கருத்தின் பொருத்தம் குறித்து, திருவாளர். டி. ஆர். பந்தர்கார் அவர்கள் எதிர்வாதம் செய்துள்ளார். "பாவரி" என்ற பிராமண ஆசிரியரின் மாணவர்கள் மேற்கொண்ட பயண நெறிகளை விளக்கிக்கூறும் "சுத்தனி பாதம்" என்ற நூலிலிருந்து, ஒரு கதையை, அவர், சான்றாக எடுத்தாளுகிறார். "தக்கண பாதத்தில், அசகா அஸ்மகா நாட்டில், கோதாவரிக் கரையில் உள்ள ஒரு சிற்றுாரில், "பாவரி, குடியேறி வாழந்திருந்தார். அவர், தம்முடைய பதினாறு மாணவர் களைப் புத்தபெருமானுக்குத் தங்கள் வழிபாட்டினைச் செலுத்தி வருமாறு பணித்து அனுப்பிவைத்தார். அவர்கள் வடக்கில், "முளகா" நாட்டைச் சேர்ந்த (நைசாம் அரசின் ஆட்சி எல்லைக்கு உட்பட்டதான இன்றைய "பைதான்") படித்தானத்திற்கும், அடுத்து "மாகிஸ்மதி" க்கும் (இது இந்தோர் நாட்டெல்லையில், நர்மதாக் கரையில் உள்ள "மாந்தாதம்" ஆக அடையாளம் காட்டப்படுகிறது) உச்சயினிக்கும், சாகேதத்திற்கும் அவற்றிற்கு அப்பாலும் பயணம் செய்தனர். o - இதிலிருந்து அம்மாணவர்கள், மாகிஸ் மதியிலிருந்து, விந்திய மலையின் அப்பால் பகுதிக்கு விதர்ப்ப நாட்டின் மூலமாகவே சென்றிருக்கவேண்டும் எனப், பொருத்தமுறக் கொள்கிறார் திரு. பந்தர்கார் அவர்கள். ஆரியர்கள்,