பக்கம்:தமிழர் வரலாறு 1, பி. டி. சீனிவாச அய்யங்கார்.pdf/101

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

76

தமிழர் வரலாறு

கேடயங்களை ஏந்தித், தென்னவர்களைப் போலத் தலையில் மலர்களைச் சூட்டிக்கொண்டனர். என அவன் கூறுகிறான். ( "குர்வன்தி குஸுமாபிடான் கிரஸ்ஸு ஸுரப்ஹீனமி மெக்ஹப் ரகாஸயிஹ் பலகயிர் தாக்வஷினா த்யாஷஹ் யத் ஹானராஹ்" (அயோத்யா காண்டம் 93 : 13) அம்பட்டரைக் குறிக்கும், உண்மையான தமிழ்ச்சொல் இல்லை; இப்போதுள்ள சொல் ஒன்று, சமற்கிருதத்திலிருந்து கடன் பெற்றது, அல்லது பிற் காலத்துத் தொகைச் சொல் ஆகும் என்ற உண்மை நிலையிலிருந்து அம்பட்டர் செய்யும் முடிதிருத்தும் தொழில், பண்டைய தென்னிந்திய மக்களுக்குத் தெரியாத ஒன்று ஆதலின், அவர்கள், தலைமுழுதும், முடி வளர்த்தனர். தாங்கள் வாழும் நிலங்கள் ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு மலர் தங்களின் காதல் போர்க் கடமைகள் ஒவ்வொன்றிற்கும் ஒவ்வொரு மலர் என எல்லாவகை மலர்களாலும், தங்கள் தலைமுடியினை ஒப்பனை செய்துகொள்வதில் தமிழர்கள் காதல் கொண்டிருந்தனர். உண்மையில் மலர்கள் பற்றிய விஞ்ஞான அறிவு, அவர்களிடையே மிகச் சிறந்து வளர்ந் திருந்தது. ஆகவே, இப்பழக்கம் வடவர்களுக்குப் பண்டைக் காலத்திலேயே தெரிந்திருப்பதில் பொருந்தாமை எதுவும் இல்லை.

உண்மைக்கு மாறான சில தகவல்கள்:-

மேலே கொடுக்கப்பட்ட, தென்னிந்தியா பற்றி இராமாயணத்தால் அளிக்கப்பட்ட தகவல்கள் அப் பாக்களின் தொடக்கநிலை வருகையைச் சேர்ந்தனவே ஆகும் : ஆனால் தமிழரசுகள் குறித்துக் கருத்துக்கூறப்பட இருப்பன அதற்கு ஒப்பான நிலையினை உடையன இல்லை. எல்லாத் திசைகளிலும், சீதையைத் தேடத் திட்டமிட்டபோது, சுக்ரீவன் தன்னுடைய தொண்டர் ஒருவரைத் தெற்கே அனுப்பினான். இதுபற்றிய விளக்கத்தைத் தரும்போது நூலாசிரியரின் கிஷ்கிந்தாவுக்கு மட்டும் தெற்கில் உள்ளதாக அல்லாமல், விந்தியமலைக்கும் தெற்கில் கிடந்த அரசுகளின் பட்டியல் ஒன்றைத் தருகிறார். அதில் ஆந்திரர், புண்டார், சோழர்,