பக்கம்:தமிழர் வரலாறு 1, பி. டி. சீனிவாச அய்யங்கார்.pdf/105

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

80

தமிழர் வரலாறு

த்ரக்ஷத்ஹாதித்ய சங்காலம்அகஸ்த்யாம்ர்ஷித்தமம்" இராமாயணம் வி. 41:15:16) ஈண்டு,சீதை, இராவணனால் மாயமாகக் கவர்ந்து செல்லப்பட்டது போல, அகத்தியர், நூலாசிரியரால், மாயமாகக் கொண்டு செல்லப்பட்டு, மலையமலை உச்சியில் போடப்பட்டுள்ளார். ஆகவே, இராமர்காலத்து அகத்தியரை விட அதிக தூரம் தெற்கே சென்று, தமிழ்நாட்டில் வாழத் தொடங்கிவிட்ட அகத்தியர்களுக்குப் பிறகு வாழ்ந்த பிற் காலப் புலவர் ஒருவரால், இது, நுழைக்கப்பட்டிருக்க வேண்டும், - .

தென்னிந்தியாவில் ஆரிய வழிபாட்டு முறை பரவுதல்.

இராமன் வெற்றி, இராவணன் அழிவுகளின் விளைவு, தென்னிந்தியாவில் மிகவும் பெரியது. இராமர் காலத்திற்கு முன்பே, ஜனத்தானத்திற்குத் தெற்கே நெருக்கிப் புகுந்து கொண்டிருந்த ஆரியர்கள், பெரும் எண்ணிக்கையில் மேலும் தெற்கில் பரவி வாழலாயினர். பிரமராக்கதரின் எண்ணிக்கை பெருகிற்று. பிரம்மராக்கதர் என்ற சொல் பிற்கால வழக்கில் விரும்பத்தகாத கசப்பான பொருளைப் பெற்றுவிட்டது. அவர்களுடைய செயல்பாடுகள் குறித்து. பொருத்தமற்ற கட்டுக்கதைகள் கட்டிவிடப்பட்டன். ஆனால், அச்சொல் தொடக்கத்தில் விசுவாமித்ரரின் மகன்களைப் போல, தஸ் யூக்கள், இராக்கதர்களோடு மண உறவு கொண்டு, அந் நிலையால் பிராமணர்களாகவே இருந்து, விசுவாமித்ர, கெளசிகக் கோத்திரங்களைக் கண்ட பிராமணர்களின் மரபு வழியில் வந்தவர்கள் அல்லது அகத்தியர்களின் மாணவர்களாக அவர் கோத்திரத்தோடு கலந்துவிட்டவர்கள் என்றும் பொருளுடையதாகும். (விசுவாமித்திரர் ஆணைக்கு அடங்கி விருந்த மத்துவச்சந்தன் மற்றும் இளைய மகன்கள் கெளசிக மரபினர் ஆயினர். அவர் ஆணையை மறுத்த மூத்த மகன்கள், விஸ்வாமித்திர கோத்திரத்தைச் சேர்ந்தவராயினர் என்கிறது. பாகவதபுராணம்". (I x :.16 : 29-37 பர்கிதர் :பக்கம் : 235) (இவர்களுக்கு முன்பே, பார்க்கவர்களும் அவர்களின்