பக்கம்:தமிழர் வரலாறு 1, பி. டி. சீனிவாச அய்யங்கார்.pdf/112

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

இராமனும் தென் இந்தியாவும்

87

 பிட்ட ஒர் ஒழுக்க நிலையை உணர்த்துபவையாகத் தெரிகின்றது. "ராவணோனம ப்ஹத்ரந்தெ தஸ்க்ரீவஹம் ப்ரதாபவான்' (III-48-2) ஸெதெயாஹ் வாசம் ஸ்றுத்வ தஸக்ரீவஹ ப்ரதாபாவான் என்ற தொடர்களில் ப்ரதா பவான்’' என்ற சொல்லை இணைத்திருக்கும் முறை 'ராக்ஷஸென்த்ஹ் ப்ரதாபவான் என்ற தொடரில் இணைத்திருப்பது போன்றதே ஆகும். இந்த மூன்று எடுத்துக் காட்டுகளிலும் இராவணன் ப்ரதாபம் அல்லது புகழ் அச் சொல்லின் முன் இணைக்கப்படும் சொற்களாலேயே உணர்த்தப்படுகிறது. கடைசித் தொடரின் பொருள்: ராக்க்ஷதர்களுக்கு அரசன் என்ற புகழை இராவணன் பெற்றுளான்” எனும் பொருளுணர்த்துகிறது. ஆகவே அத் தொடரின் பொருள் தெளிவாகவே உளது. ஆனால், இராவணன் எந்தெந்த வகையில் புகழ்பெற்றவன் என்பதை உணர்ந்து கொண்டாலல்லது முதல் இரு தொடர்களின் பொருளை அறிவது இயலாது. அரக்கர் தலைவனின் புகழ்,

ராவணொ - லொக - ராவஹஹ்;
ராவணொ - ஸ்த்ரு - ராவன் அஹ்)
யென வித்ரஸித-லொக-ஸ்ள தெவ் ஆஸTர-பற்றக்அஹ் லொக க்க்ஷொப் ஹயிதாரம்க நாதை ர்ப்ஹூதவிராவினம்’’

என்ற தொடர்களில் வெளிப்படுகின்றன. அவன் உலகங்களைத் தொல்லைக்கு உள்ளாக்கினான். பகைவர்களைத் தொல்லைக்கு உள்ளாக்கினான். கடவுள் உலகிற்கும் அசுரர்களுக்கும் பன்னர்களுக்கும் பேரச்சம் ஊட்டினான். உலகைத் துன்புறுத்தி ஆங்கு வாழ்பவரைத் தன் குரலால் அச்சுறுத்தினான்.

இராவணனுடைய சிறந்த புகழெல்லாம் ஒவ்வொருவருக்கும் தொல்லை விளைவிப்பதிலேயே அடங்கியிருந்தது என்பதை இவை காட்டுகின்றன. 'தஸ்க்ரீவஹ ப்ரதாபவன்' என்பதன் பொருள் தொடக்கத்தில் தொல்லை தரும் அல்லது இன்னல் தரும் புகழுடையான் என்பதாம். 'தாஸஸ்ய என்பதும்