பக்கம்:தமிழர் வரலாறு 1, பி. டி. சீனிவாச அய்யங்கார்.pdf/117

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

92

தமிழர் வரலாறு

பெற்றிருப்பதை ஒரு கணமேனும் தாங்கிக் கொண்டிருந்திருக்க மாட்டான்.

The jealous and all powerful Ravana would not have brooked for a moment the prevelance of the pandyas near his own doors : (Page 53)

3. இராமாயணம் நடைபெற்ற அந்த நாட்களில், பாண்டியர்கள், ஆட்சியாளர்களாக இருந்திருப்பின், அவர்கள், இராமனுக்கும், இராவணனுக்கும் நடைபெற்ற பெரும் போரில் எந்தப் பக்கத்திலும் சேர்ந்திருந்தாரல்லர் என்பது நம்பக்கூடாத ஒன்று.

“If the Pandyas had been rulers at that time, it is impossible to believe, that they joined neither side in the great war between Rama and Ravana.”. (Page : 53)

4. மேலும், இந்தியாவின் தென்கோடிப் பகுதியில் நிகழ்ந்த இராமனின் படைச் செலவினைக் குறிப்பிடும் பகுதியில், இம் மாவட்டங்கள் குறிப்பிடப்படவில்லை. ஏன் ? இராமன் எந்தக் கரையிலிருந்து கடலைக் கடந்து இலங்கை அடைந்தானோ அந்தக் கடற்கரையினைக் கொண்ட பாண்டிய மாவட்டங்கூடக் குறிப்பிடப்படவில்லை. தன்னுடைய புகழ்மிக்க பாலத்தைப் பாண்டி நாட்டிலிருந்தே தொடங்கினான். பாண்டியர்கள், அந்தக் காலத்தில் இருந்திருப்பாராயின், பாட்டின் அப்பகுதியில் அது குறிப்பிடப் பட்டிருக்கும்.

“Moreover, these districts not even, that of the pandyas, from whose coast, Rama, Crossed to Ceylon, are ‘not mentioned when describing Rama’s march in the southern most part of India. He started his famous bridge from the Pandya country and if the Pandyas had existed in his time it would have been mentioned in this part of the poem" (Page : 53, 54)