பக்கம்:தமிழர் வரலாறு 1, பி. டி. சீனிவாச அய்யங்கார்.pdf/122

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

இராமனும் தென் இந்தியாவும்

97

 கடலைக் கடக்கக் கட்டிய பாலத்தின் தொடக்கம் பாண்டி நாட்டுக் கடற்கரையிலிருந்து, அந்நாட்களில் அப்பகுதியில் பாண்டிய ஆட்சி நடைபெற்றிருந்திருக்குமாயின் அப்பகுதி பாண்டி நாட்டுக்கு உரியதாக வால்மிகத்தில் குறிப்பிடப் பட்டிருக்கும். ஆனால் அவ்வாறு குறிப்பிடப்படவில்லை; ஆகவே அக்காலத்தில் ஆங்குப் பாண்டிய அரச இனமே தோன்றவில்லை என்பதும் ஏற்புடையதாகாது.

ஓரிடத்தில் அ' என்ற இனத்தவர் இல்லை என்பதை உறுதி செய்யும் போது, அந்த இடத்தில் வேறு யாரோ ஒர் இனத்தவர் இருந்திருக்க வேண்டுமல்லவா? அந்த இனத்தவர் 'ஆ என்ற இனத்தவர் எனக் கொண்டு அந்த இடத்தில் 'ஆ' என்ற இனத்தவரே இருந்தனர்; 'அ' என்ற இனத்தவர் அல்லர்’ என்பதை உறுதி செய்யவல்ல வலுவான அகப்புறச் சான்றுகளைக் காட்டிய பின்னரே அது செய்ய வேண்டும். அது செய்யாது ஒர் அரச இனத்தவர்க்குரிய ஒர் இடத்தில் நிகழ்ந்த நிகழ்ச்சியைக் குறிப்பிட்டுவிட்டு, அவ்விடத்தை ஆண்டிருந்த அரச இனத்தவரைக் குறிப்பிடாத ஒரே காரணத்தைக் காட்டி அந்த நிகழ்ச்சி நடைபெற்ற போது அந்த இடத்தில் அந்த அரச இனத்தவரே இல்லை என வாதிடுவது வாத முறையாகாது.

இராமன் தமிழகத்தின் தென்கோடி முனையில் பாலம் அமைத்துக் கடலைக்கடந்தபோது அத்தென் கோடி நிலப் பரப்பில் பாண்டியரே இல்லை என வாதாடும் திருவாளர் பி. டி. எஸ். அவர்கள், பாண்டியர் இல்லை ஆயின் ஆங்கு, வேறு யாரோ ஒர் இனத்தவர் இருந்திருக்க வேண்டுமல்லவா? அந்த இனத்தவர் இன்னார் என்பதைச் சான்று காட்டி உறுதி செய்த பின்னரே பாண்டியர் ஆங்கு இல்லை என்ற முடிவிற்கு வந்திருக்க வேண்டும், அது செய்யாது இராமன் பாலம் அமைத்த அந்நிலத்துக்கு உரியவர் பாண்டியர் என வால்மீகி கூறவில்லை. ஆகவே பாண்டியர் அப்போது ஆங்கு இல்லை எனக் கொண்ட முடிவு உண்மையொடு பட்ட முடிவு ஆகாது.

த.வ-7