பக்கம்:தமிழர் வரலாறு 1, பி. டி. சீனிவாச அய்யங்கார்.pdf/123

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

98

தமிழர் வரலாறு

ஒரு நூலில், ஒரு பொருள் குறிப்பிடப்படவில்லை என்பதினாலேயே அப்பொருள் அந் நூல் எழுதிய காலத்தில் இல்லவே இல்லை என்றவாதம், இருக்கு வேதத்தில் ஆலமரம் குறிப்பிடப்படவில்லை என்பதினாலேயே, இருக்குவேத 'காலத்தில் ஆல மரமே இல்லை என்பதுபோலும் பொருளற்ற வாதமாம். திருவாளர் பி. டி. எஸ். அவர்களாலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட வாத முறை இது.

கி. மு. ஏழாம் நூற்றாண்டினராய பாணினி, தம்முடைய இலக்கண நூலில் சேர, சோழ, பாண்டியர் பெயர்களைக் 'குறிப்பிடவில்லை. ஆகவே, அவர் காலத்தில் அப்பெயர்களைப் பாணினி அறிந்திருக்கவில்லை எனத் திருவாளர் பந்தர்கார் கொண்ட முடிவினை மறுக்கும் நிலையில், திரு. பந்தர்கார் அவர்களின் வாதம், வாய் மூடி இருப்பது விடுத்துப் பெரு நகைப்பிற்கு உரிய ஒன்றாகத் தள்ளி விடுவதாம் எனக் கூறி, தம் வாதத்திற்கு ஆதாரமாக வேதத்தில் 'ஆல்' குறிப்பிடப்படவில்லை என்பதால் வேத காலத்தில் ஆலே’’, இல்லை என்பது போலாம் எனக் கூறும் திரு. பர்கிதர் அவர்களின் வாதத்தைத், திருவாளர் பி. டி. எஸ்.அவர்களே ஆண்டுள்ளார். To say that he did not know the names of the countries (Pandya. Cola, and Kerala) he does not mention in his grammar, is to push the arrangement from silence to the most absurd lengths: Speaking of the argument from silence pargiter remarks, One might argue with more force that, because the banyan is not mentioned in the Rig Veda, there were none in India, when the hymns were composed” (History of the Tamils - Page-124)

ஆக சேரர், சோழ, பாண்டிய அரச இனங்கள், இராமாயண காலத்தில் தோன்றவில்லை. இராவணன் வீழ்ச்சிக்குப் பின்னரே தோன்றியிருக்க வேண்டும் என்பதற்குத் திருவாளர் பி. டி. எஸ். அவர்கள் காட்டிய காரணங்கள் பொருத்தமானவையோ, போதுமானவையோ அல்ல என்பது