பக்கம்:தமிழர் வரலாறு 1, பி. டி. சீனிவாச அய்யங்கார்.pdf/125

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

100

தமிழர் வரலாறு

ஆக, வால்மீகியார், பாண்டிய நாட்டையும் குறிப்பிட்டுள்ளார். அப் பாண்டிய நாட்டுப் பெருநகரத்து வாயில்களையும், அப்பாண்டி நாட்டுக்கே உரிய வளமாம் முத்து வளத்தையும் குறிப்பிட்டுள்ளது. உள்ளங்கை நெல்லிக்கனி என உறுதிப்பட்டிருக்கவும் “வால்மீகி பாண்டியரைப் பெயர் சுட்டிக் கூறவில்லை” என்பதிலும் உண்மை இல்லை.

ஆக, சேர, சோழ, பாண்டிய அரசு இனங்கள், இராமாயண காலத்தில் தோன்றவில்லை. இராவணன் வீழ்ச்சிக்குப் பின்னரே, தோன்றின என்பதற்குத் திருவாளர் பி. டி. சீனிவாச அய்யங்கார் அவர்கள் எடுத்துவைத்த வாதம் எடுபடவில்லை. ஆகவே, அவரின் அக்கூற்று, இந்திய வரலாற்று உண்மையொடு பட்ட முடிவன்று என்பது உறுதி செய்யப்பட்டது.

சேதுவைக் குறிப்பிடும் வால்மீகி, அச்சேதுக் கரைக்கு உரியராம் பாண்டியரைப் பெயர் சுட்டிக் கூறாமையைக் காரணம் காட்டி, இராமயண காலத்தில், பாண்டியர், அப்பகுதியை ஆண்டிருந்தால், வால்மீகி அப்பாண்டியரைக் குறிப்பிட்டிருப்பார்: வால்மீகி அவர்களைக் குறிப்பிடவில்லை; ஆகவே இராமாயண காலத்தில், பாண்டியர் அரசு அங்குத் தோன்றவில்லை: இராமர் சேது அணை கட்டியபோது, அச் சேதுக் கடற்கரைப் பகுதியில் பாண்டியர் அரசு தோன்ற வில்லை

More over, these districts not even, that of the pandyas, from whose coast Rama crossed to ceylon are not mentioned when describing Rama’s march in the southern most part of India. He started his famous bridge from the pandya country and if the pandyas had existed in his time, if would have been mentioned in this part of the poem, (Page-54)

எனக் கூறுமுகத்தால், இன்ன ஒரு பொருள் அல்லது இன்ன ஒரு செய்தி அல்லது இன்ன ஒர் அரச இனம், இராமர்