பக்கம்:தமிழர் வரலாறு 1, பி. டி. சீனிவாச அய்யங்கார்.pdf/131

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

106

தமிழர் வரலாறு

ஈர்ப்பாற்றல் விதிகளின் எல்லையைக் கடக்கவும் செய்யும் - இன்றைய வாழ்க்கையோடு உளம்கொளத்தக்க மாறுபட்ட தன்மையைக் கொண்டதாகும்.

காதற்பாக்களின் இலக்கிய மரபுகள், உண்மையான வாழ்க்கை

நிகழ்ச்சிகளிலிருந்து பிறந்தனவே...
  உலக நிலப்பரப்பின் மக்கள் வாழத்தக்க பகுதிகள், ஐந்து வகையாகப் பிரிக்கப்படும் ; மனிதன் முதன் முதலில் வாழத் தொடங்கி, வேட்டையாடி உயிர் வாழ்ந்த, மரம் செடி, கொடிகளைச் சிறிய அளவிலேயே கொண்ட சிறு மலைப்பகுதி; தண்ணீர் கருதி, மரம், செடி, கொடிகள், அங்கொன்றும் இங்கொன்றுமாகி, மனிதன், முதன்முதலில், வீர ஒழுக்கங்களையும், கொள்ளையடித்து வாழும் உள்ளுணர்வையும் வளர்த்துக்கொண்ட மணல்செறிந்த பாலை; மனித வாழ்க்கையில், ஆனிரை மேய்க்கும் கூட்டத்தை, முதன் முதலில் கண்ட காட்டுப்பகுதி ; மனிதன் மீன் பிடிக்கவும், படகுகளில் கடல் மேல் செல்லவும், உணவுப் பொருள்களுக்காக, மீனையும், உப்பையும் பண்ட மாற்றம் செய்யவும் கற்றுக் கொண்ட கடற்கரைப் பகுதி , உழவும், நெசவும் முதன் முதலில் தோற்றுவிக்கப்பட்ட ஆற்றுப்பள்ளத்தாக்கு எனப் பழந்தமிழ்ப் புலவர்களால் ஐந்து திணைகளாக அது பிரிக்கப்பட்டது, என்பது முதல் அதிகாரத்தில் முன்பே குறிப்பிடப்பட்டது. ஒரு நாகரீகத்திலிருந்து மற்றொரு நாகரீகத்திற்கு, மனிதன் மேற்கொண்ட பயணம், காலத்தின் நீண்ட பருவங்களை எடுத்துக்கொண்டது. ஒரு நிலப் பகுதியிலிருந்து, பிறிதொரு நிலப்பகுதிக்கு மனிதனின் குடி, பெயர்ச்சியே இதற்குத் தலையாய காரணம். ஆனால், அடுத்து வேறுவகை நாகரீகம் தன்னில் இடங்கொள்ளும் போது, ஒவ்வொரு நிலப்பகுதியும், தத்தமக்குரிய நாகரீகத்தை விடாமல் மேற்கொண்டிருந்தது. அவ்வகையில், மனித நாகரீகத்தின், முதல் நிலை உருப்பெற்ற, குறிஞ்சி அல்லது: மலை நாட்டில், மனிதன், பாதி நாடோடி வாழ்க்கையாம், வேடன் வாழ்க்கையை நடத்தி வந்தான். காதல் உறவு,