பக்கம்:தமிழர் வரலாறு 1, பி. டி. சீனிவாச அய்யங்கார்.pdf/14

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

16

தம்முடைய இலக்கண நூலுக்கு ஆதாரமாகக் கொண்ட மரபு வழிப் பாடல்களுக்கு முற்பட்டதான இயற்கைப் பாடல்கள் என அழைக்கப்படும் பாடல்களின் வளர்ச்சிப் பருவத்திற்கு, ஐந்நூறு ஆண்டுகளை வகுப்பது, மிகைப்படுத்தப்பட்ட மதிப்பீடு ஆகாது. இவ்வகையில், தமிழ் இலக்கியத் தோற்றத்தின் பிற்பட்ட கால எல்லையாக ஏறத்தாழ கி. மு. 1000ஐ அடைகிறோம். இவ்வகை பாக்களின் வளர்ச்சிக்கு வழிசெய்து, அப்பாக்களில் எதிர் ஒளி காட்டும் நாகரிகம் வளர்ச்சி பெற, பல நூறு ஆண்டுகளை எடுத்துக்கொண்டிருக்க வேண்டும். ஆகவே தமிழர்களின் பழம்பெரும் நாகரீகத்தை, அவர்கள் கிறித்துவுக்குச் சில ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே அடைந்திருக்கவேண்டும் என முடிவு கொள்ளலாம்.

It will not be an exaggerated estimate to ascribe a period, of five centuries to the development of, what one might call, the natural poetry, which preceded the conventional poetry, on which Tholkappiyanar based his grammar. We thus reach about 1000 B.C. as the later limit of the birth of Tamil poetry. The culture that led to the evolution of this poetry and was reflected in it, must have taken ages to grow. and we can hence conclude, that the early culture of the Tamils must have been reched by them a few miliennewms before Christ” Page. 71.

இவ்வாறு தமிழர் தம் மொழி, நாகரீகம், வாணிகம் ஆகியவற்றின் பழம் பெருமைகளைப் பாராட்டும் கருவூலமாகத் திகழும் அந்நூலில், தமிழர் வரலாற்று உண்மை நிலையை உணர்த்தக்கூடிய போதிய அகச்சான்றுகள், ஆசிரியர் அவர்களுக்குக் கிடைக்காமையால், அந்நூலின் இடையிடையே,

1. சேர, சோழ, பாண்டியப் பேரரச இனங்கள், இராமாயண காலத்திற்குப் பின்னர், இராவணன் அழிவிற்குப் பின்னரே தோன்றியிருக்க வேண்டும்.