பக்கம்:தமிழர் வரலாறு 1, பி. டி. சீனிவாச அய்யங்கார்.pdf/140

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கி.மு இரண்டாவது ... தமிழர் நாகரீகம்

115

பொதுமக்களுக்கு வாய்க்கும். ஆனால், போரில் ஆற்றும் அருஞ்செயல்களுக்கான பெருமையெல்லாம், பொதுவாகப் போர்ப்படைத் தலைவர்களையே சென்று சேரும். ஏழையின் காதலைப் பாடினால் பரிசு கிட்டாது. ஆகவே காதற்பாக்களின் பாட்டுடைத் தலைவர்களும் அரசர்களே. அவ்வகைப் பாட்டுடைத் தலைவர்களும், அவர் வழிவந்தவர்களும், அவர்கள் வாழும் நிலத்தோடு தொடர்புடைய சொல்லால் பெயரிடப்பட்டனர். “திணைகளுக்குரிய பழங்குடித் தலைவர்களின் பெயர்கள், பெயர் அதாவது பண்பு, வினை, அதாவது செயல் ஆகிய இரண்டை அடிப்படையாகக் கொண்டு வருவனவாம்”, என்றும், “ஆயர், வேட்டுவர் என்ற, திணைவாழ் மக்களுக்குரிய பெயர்கள், அத்திணை, வாழ் மக்களின் தலைவர்களுக்கும் பொருந்தும்” என்றும் ஏனைய நிலங்களில் வாழும் மக்களைக் குறிக்க வரும் திணைப் பெயர்களை ஆராய்ந்து காணின், அவையும் இவை போன்றனவே ; அவை, அத்திணை மக்களின் தலைவர்களுக்கும் பொருந்தும் என்றெல்லாம் கூறுகிறார் தொல்காப்பியனார்.

“பெயரும் வினையும் என்று ஆயிரு வகைய திணைதொறும் மரீஇய திணை நிலப் பெயரே.” “ஆயர் வேட்டுவர் ஆடுஉத் திணைப்பெயர் ஆவயின் வருஉம் கிழவரும் உளரே.” “ஏனோர் மருங்கினும் எண்ணுங் காலை ஆனா வகைய திணை நிலப் பெயரே” (தொல் : அகத்திணை இயல் : 20, 21, 22)


பழங்குடி மக்களின் இனப்பெயர்களாக இருந்த அப்பெயர்கள்லெல்லாம், இப்போது, சாதிப் பெயர்களாகிவிட்டன. உ-ம்: குறவர், பரதவர், இடையர், வெள்ளாளர், குறிப்பிட்ட ஒரு நிலப்பகுதியிலேயே வாழ்ந்து, அப்பழங்குடியினரிடையே இயற்கைச் சூழல், விதித்துவிட்ட தொழில்களுக்கே உரிய பழக்க வழக்கங்களை மேற்கொண்டவரிடையே, தங்கள் தங்கள்.இனத்தவர்க்குள்ளாகவே, திருமண உறவு கொள்ளும்,