பக்கம்:தமிழர் வரலாறு 1, பி. டி. சீனிவாச அய்யங்கார்.pdf/142

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கி.மு இரண்டாவது ... தமிழர் நாகரீகம்

117

மாவினம்: மானும், முயலும். மரம் : கொன்றையும், குருந்தும். பறவை: காட்டுக் கோழியும், கெளதாரியும்: தொழில்: நிரை மேய்த்தலும், வரகு, சாமை திரட்டலும்: பொழுதுபோக்கு :ஏறுதழுவல், மலர் : இந்நிலத்துக்குத் தனிப்பெயர் தந்த முல்லையும், பிடவும், தளவும் தோன்றியும், நீர் : காட்டாறு.

குறிஞ்சிக்குப் பொருந்தும் உணவு : ஐவனம் எனப்படும் மலை நெல்லும், மூங்கில் அரிசியும், தினையும் மாவினம் புலியும், யானையும், கரடியும், காட்டுப்பன்றியும். மரம் : அகிலும், ஆரமும், தேக்கும், திமிசும், வேங்கையும். பறவை: கிளியும், மயிலும். தொழில் : தேன் அழித்தலும், தினை விளைத்தலும், கிளி கடிதலும், வேட்டையாடலும். மலர்கள்: குறிஞ்சியும், காந்தளும், சுனைக் குவளையும் நீர் : அருவி நீரும், சுனை நீரும்.

மருதத்துக்குரிய உணவு : செந்நெல்லும், வெண்ணெல்லும் மாவினம் : எருமையும், நீர் நாயும். மரம் : மருதமும், காஞ்சியும், வஞ்சிக் கொடியும். பறவை : தாராவும், நீர்க்கோழியும், அன்னமும், அல்லிசைப் புள்ளும். தொழில் : நடுதலும், களைக்ட்டலும், அரிதலும், கடாவிடுதலும் ; மலர் : தாமரையும், கழுநீரும் நீர் : ஆற்று நீரும், கிணற்று நீரும், குளத்து நீரும்.

நெய்தல் திணைக்குரிய உணவு : உப்பு, மீன் விற்றும் பெற்ற பண்டங்கள். மாவினம் : உப்பு மூட்டை சுமக்கும். பொதிமாடு. மரம் : புன்னையும், ஞரழலும், கண்டலும் பறவை கடற்காக்கை : தொழில் : மீன் பிடித்தலும், உப்பு விளைத்தலும், அவற்றை விற்றலும். மலர் : கைதையும், நெய்தலும்; நீர் : மணற்கிணறும், உவர்க்குழியும்.

பாலைக்குப் பொருந்தும் உணவு : ஆலனைத்தும், குறை பாடியும் கொண்ட பொருள்கள் ; மாவினம் : வலுவிழந்த யானையும், புலியும், செந்நாயும். மரம் : வற்றிய இலுப்பை, ஒமை, உழிஞை, ஞெமை, பாலை : கள்ளி;