பக்கம்:தமிழர் வரலாறு 1, பி. டி. சீனிவாச அய்யங்கார்.pdf/144

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கி.மு. இரண்டாவது ... தமிழர் நாகரீகம்

119

ஆனால், இவ்வேறுபாடு, நியபேறுகொள்ள, நீண்ட காலத்தை எடுத்துக் கொண்டது.

மனித வாழ்க்கை வளர்ச்சியின் தொடக்க காலத்திலிருத்தே, அவன், சில கடவுள் அல்லது கடவுள்களை வணங்கி வந்தான் என்பதில் ஐயம் இல்லை.

அப் பழங்காலத்தில் குடிப்பெயர்களில், அக்குடிகளுக்கு உரிய அடையாளச் சின்னங்களைக் காணவல்ல, இருளில், வன்னியர் போலும், பல்வேறு குழுக்களாக மக்கள் பிரிக்கப்பட்டனர். சமஸ்கிருத இலக்கியத்தில் வானரர், (குரங்குப் பழங்குடி) கஜர் (வெள்ளாட்டுப் பழங்குடி) கருடர் (கருடன் பழங்குடி) மட்சர் (மீன் பழங்குடி) விருஷ்ணர் (செம்மறியாட்டுப் பழங்குடி) நாகர் (பாம்புப் பழங்குடி) என்ற அடையாளச் சின்னக் குடி பெயர்களைக் காண்கிறோம். இவர்களில் நாகர்கள், வரலாற்றுக் காலத்தில், வடகிழக்கு, வடமேற்கு, மத்திய, தென்னிந்திய மாநிலங்களில் வாழக்காண்கிறோம். ஆதலின், அவர்கள், பரவலாக வாழ்ந்தவர்களாகத் தெரிகிறது. நாக வழிபாட்டுமுறை பெரும்பாலும், மலைநாட்டுக் குகை வாழ் மக்களிடையே தோன்றியதாகும். குலமரபு காட்டும் அடையாளச் சின்னக் கடவுள்களே அல்லாமல், மரங்கள், ஆறுகள், மலைகளில் வாழும் கடவுள்கள், காவல் தெய்வங்கள், கிராம தேவதைகள், எல்லையம்மன்கள், துயர் தரும் பேய்கள், எண்ணற்ற ஆவிகள், பல்வேறு சிறு தெய்வங்களையும் மக்கள் வழி பட்டனர். இந்தப் பழைய கடவுள் வழிபாட்டு முறைகளில், பெரும்பாலானவை, மக்களில், சமுதாய நிலையில் தாழ்ந்திருப்பவர்களிடையே, தங்களுடைய நாகரீகமற்ற காட்டு மிராண்டிக் கரடுமுரடான நிலையில், இன்றும் இடம் பெற்றுள்ளன. சமுதாயத்தில் மேல்தட்டில் நிற்கும் மக்களும் துன்பக் காலங்களில், பேய், பிசாசு போலும் ஆவிகளின் துணை நாடிச் செல்வதை, அடியோடு விட்டுவிட்டாரல்லர்.

இவற்றில் ஒரு சில வழிபாட்டு முறைகள், ஒரு படி உயர்ந்த நாகரீக நிலையை உணர்த்தும், உயர்ந்த வழிபாட்டு