பக்கம்:தமிழர் வரலாறு 1, பி. டி. சீனிவாச அய்யங்கார்.pdf/156

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

இணைப்பு :

தொல்காப்பியர் காலம்

தமிழர் வரலாறு (History of the Tamils) என்ற நூலின் ஆசிரியர், திருவாளர் பி. டி. சீனிவாச அய்யங்கார், “அழித்தன போக அழியாதுள்ள தமிழ் நூல்களில் நனிமிகப் பழமையானது, தொல் காப்பியர் இயற்றிய தொல்காப்பியம். அது, பெரும்பாலும், கி. பி. முதல் அல்லது இரண்டாம் நூற்றாண்டிற்குப் பிற்பட்ட காலத்தில் எழுதப்பட்டிருக்காது”

(“These conventions are described in the Poruladigaram of the Tamil grammar, clled, Tolkappiyam by Tolkappiyar. This is the earliest extant Tamil book and was probably composed not later than the I or II century A: D.” page : 70)

என ஓரிடத்தில் கூறினாலும், பிறிதோரிடத்தில், “தமிழ் நூல்கள் பரவலாக எழுதப்பட்ட கி.மு. முதலாம் நூற்றாண்டிற்கு முன்னர், அகஸ்தியர் வாழ்ந்திருக்க இயலாது. தொல்காப்பியம் பற்றிய ஆய்வு, அதன் ஆசிரியரும், அவர்தம் ஆசிரியரும், அதற்கு ஒரு நூறு ஆண்டு அல்லது அதற்கு மேலும் கழித்தே வாழ்ந்திருக்க வேண்டும் எனக் கொள்ளவே நம்மை வற்புறுத்துகிறது”

(“Agattiyanar could not have lived before the I century B. C., when Tamil writing must have begun to be, Comnolny used-A study of the Tolkappiyam compels us to believe, that Master and pupil must have lived, a century or more later” page : 216)

எனக் கூறுவதன் மூலம், தொல்காப்பியரை, கி. மு. முதல் நூற்றாண்டின் கடைவாயிற்கண் நிறுத்தவும் மறுத்துள்ளார்.