பக்கம்:தமிழர் வரலாறு 1, பி. டி. சீனிவாச அய்யங்கார்.pdf/157

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

132

தமிழர் வரலாறு

அதற்கு அவர் கூறும் காரணம் பின்வருமாறு “திருமணம் போலும் மங்கல நிகழ்ச்சிகளுக்கு உரிய நாளின் ஒரு கூறு எனும் பொருளில், “ஓரை” எனும் சொல்லைத், தொல்காப்பியர் ஆண்டுள்ளார். “மறைந்த ஒழுக்கத்து ஓரையும் நாளும் துறந்த ஒழுக்கம் கிழவோற்கு இல்லை.” (தொல் : பொருள் : களவு : 44) “ஓரை” எனும் இத்தமிழ்ச் சொல், “ஹவர்” (Hour) எனும் ஆங்கிலச் சொல்லைப் போலவே, முடிந்த முடிவாக, “ஹொர” (Hora) என்ற கிரேக்கக் சொல்லிலிருந்தே பெறப்பட்டதாகும். “ஹொர” என்ற அச்சொல், கிரேக்க மொழியில், கி. மு. ஐந்தாம் தூற்றாண்டு வரை, “ஆண்டின் ஒரு பருவம்” என்னும் பொதுப் பொருளே (Season in general) உடையதாகும். ஒரு நாளின், ஒவ்வொரு கூறும், ஏழு கோள்களில் ஒவ்வொரு கோளின் ஆட்சிக்கீழ்வருவதாகக் கொள்ளப்பட்ட கி. மு. இரண்டாம் நூற்றாண்டில் தான், “ஹொர” என்ற அச் சொல்லுக்கு, ஒரு நாளின் இருபத்தினான்கு கூறுகளில் ஒரு கூறு உணர்த்தும் பொருள் தரப்பட்டுளது. “ஹொர” என்ற அச்சொல், தான் உணர்த்தும் அச்சோதிடப் பொருள் குறிப்போடு, கி. மு. முதல் இரண்டு நூற்றாண்டுகளில், கிரேக்க மன்னர்களால் ஆட்சி செய்யப்பட்டுவந்த காந்தார நாட்டிற்குப் பயணம் செய்தது. சமஸ்கிருத நூலாசிரியர்கள், கிரேக்கர்களின் சோதிடக்கலையைக் கற்றுக்கொண்டபோது, அச்சொல். சமஸ்கிருதத்திலும் இடம் கொண்டது. பின்னர், அது, தெற்கில் பயணம் செய்து, தமிழில் நுழைந்துவிட்டது. ஆகவே, “ஓரை” என்ற சொல், தொல்காப்பியர் காலத்தின் மேல்வரம்பாகும் கி. பி. முதலாம் நூற்றாண்டிற்கு முன்னர்த் தமிழில் இடம் பெற்றிருக்க முடியாது என்று கொண்டால், அது, ஒரு நடுநிலை மதிப்பீடு ஆகும்.

(“The Tamil word “orei, like the English word “Hour”, is derived ultimately from the greek word “Hora”. Hora meant in Greek in the V century B.C., “season in general”, and it was in the II century B. C. that it was endowed with the meaning of the twenty - fourth part of a day, each such twenty-fourth