பக்கம்:தமிழர் வரலாறு 1, பி. டி. சீனிவாச அய்யங்கார்.pdf/158

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

தொல்காப்பியர் காலம்

133

part being under the rule of one of the seven planets. The word hora travelled with its astro-logical implications to: Gand hara, which was ruled in the Second and first centuries B. C. by Greek monarchs. From there it got in to Sanskrit, when Sanskrit authors, learnt Greek astrology. It travelled down South and entered Tamil. Surely it will be a modest estimate, if we assume that “orai” could not have got into Tamil before the century A. D., which must be the upper limit of the age of Tolkappiyanar.” page:216)


இவ்வாறு கூறுவதன்மூலம், ஒரை “”என்பது தமிழ்ச் சொல்; அது, தமிழ்வணிகர் மூலம் கிரேக்கம் சென்றது, “ஹொர” எனத் திரிந்து, கி. மு. ஐந்தாம் நூற்றாண்டிலேயே அம்மொழியில் இடங்கொண்டுவிட்டது எனக் கொள்வதற்குப் பதிலாக, “ஹொர” என்ற கிரேக்கச் சொல், காந்தாரத்துச் சமஸ்கிருத வல்லுநர் மூலம், தமிழகத்திற்கு வந்து, “ஒகை” எனத் திரிந்து, கி. பி. முதல் நூற்றாண்டில், தமிழில் இடம் பெற்றது எனக் கருதுகிறார், திருவாளர் அய்யங்கார் என்பது தெளிவாகிறது. ஆனால், இவ்வாறு, தமிழ்மொழிக்குப் பிற மொழி வரவினை உறுதி செய்யும் அவர்களே, பின்வருவனவற்றையும் கூறியுள்ளார்.

அர்மினிய நாட்டு, “அர்ஸசிடே” மரபின் முதல் மன்னனாகிய “வளர்ஷக்” என்பான் காலத்தில் (கி. மு. 149. 127) இந்திய வணிகத் தலைவர் இருவர், யூப்ரடஸ் ஆற்றின் மேற்குக் கரையில், “வான்” என்ற ஏரிக்கு மேற்கில், ஒரு புதிய குடியிருப்பை நிறுவி, அர்மீனிய மொழியில், “கிஸ்னி” “தெமெதெர்” என முறையே வழங்கப்பெறும் கிருஷ்ணன், பலதேவன் ஆகியோர்க்குக் கோயில்களையும் கட்டினர். வடஇந்தியாவில், கிருஷ்ணன் வழிபாடு, பெருமளவில் இடம் பெற்றுள்ளது என்றாலும், பலதேவனையும் ஒருங்கே வைத்து வழிபடும் வழக்கம், காணப்படவில்லை. ஆனால், அவ்விரு கடவுளரையும் “மாயோன்” என்றும், “வாலியோன்” என்றும் பெயர் சூட்டி, இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு