பக்கம்:தமிழர் வரலாறு 1, பி. டி. சீனிவாச அய்யங்கார்.pdf/16

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

12

It was only after the Aryar, not only settaled in the south, but began to study Tamil language and literature and to Investigate the grammer of that language, as well as of the poetry composed in it, that Tamil literature came to be committed to writing. Page: 152.

5. தத்பவ எனப்படும் சமஸ்கிருத சொற்கள், அகஸ்தியர், தொல்காப்பியர் காலங்களிலேயே, தமிழில் அழைக்கப்பட்டன.

Agastiyanar and Tolkappiyanar introduced in to Tamil a few thadbhavas, (ie) Sanskrit words. Page: 213.

6. தமிழ் இலக்கணத்தின் தந்தையாம் தொல்காப்பியர், கி. பி. முதலாம் நூற்றாண்டிற்கு முன்னர் வாழ்ந்திருக்க இயலாது.

Agastiyanar could not have lived before the 1 Century B.C. A Study of Tolkkappiyam compels us to believe that master and pupil must have lived, a century or more later, Page: 216.

7. தலை, இடை, கடைத்தமிழ்ச் சங்கங்கள் என்பன வெறும் கற்பனை அல்லது உண்மை நிகழ்ச்சிகள் ஆகா.

Chapter XVI: The Three Tamil Sangams: Page: 225-252.

8. காஞ்சிமா நகர், தமிழ்நாட்டின் எல்லைக்குள் இடம் பெற்றிருந்தாலும், பண்டைக் காலத்தில், அது, தமிழர் நாகரிகத்தைக் கொண்டிருக்கவில்லை. மாறாகச் சமஸ்கிருத நாகரீகத்தின் நடு நாயகமாகவே இருந்தது. அது, தமிழ் அரசர்களால் ஆளப்படவில்லை; ஆரிய ராஜாக்களாலேயே ஆளப்பட்டது.

The Kanchi, though technically within the borders of the tamil country, was in early times, a home of sanskrit and not Tamil culture and was ruled over, not by Tamil kings but Arya Rajas Page: 333-434.