பக்கம்:தமிழர் வரலாறு 1, பி. டி. சீனிவாச அய்யங்கார்.pdf/161

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

136

தமிழர் வரலாறு

வடிவிலும், தோகை என்ற தமிழ்ச் சொல், “துக்கி” என்ற வடிவிலும், அந்நாட்டு மொழிகளில் இடம் பெற்றிருந்தன".

(“In the X Century B.C. the Queen of Sheba gave king Solomon of spices very great store and precious stones. Once in three years, came the navy of Tharshish (belonged ... Solomon) bringing gold and silver, Ivory, and apes and peacocks... The apes and peacocks were, as in later times, sent as pets from India...Hebrew “thwkki”, peacock, is Tamil “togai", tail, the peacock being tee bird, with the splendid tail. Other articles received by the Hebrews along wiih their names from India were... and lastly "ahal” from Tamil ahil”. (Page: 129, 130.)

“திருவாளர் சாய்ஸ் என்பார், தம்முடைய சொற் பொழிவு ஒன்றில், கிறிஸ்து பிறப்பதற்கு நாலாயிரம் ஆண்டு களுக்கு முற்பட்ட காலத்தில், சுமேரிய அரசர்களின் தலை நகராய்த் திகழ்ந்து அழிந்துபோன “உர்” எனும் இடத்தில், தமிழ்நாட்டைச் சேர்ந்த தேக்கு மரத் துண்டுகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன என்றும், மெசபடோமியப் பள்ளித் தாக்கில் விளங்கிய மிகப் பழைய பெருநகராம் பாபிலோனியாவிலும், அதைச் சூழ உள்ள நாட்டிலும் வாழ்ந்த மக்கள் அணிந்த ஆடை வகைகளுள், “சிந்து” எனும் பெயருடையதொரு ஆடையும் இடம் பெற்றுளது என்றும் கூறியுள்ளார். “சிந்து” எனும் இச்சொல், தமிழின் உடன் பிறப்பு மொழிகளாகிய துளுவிலும், கன்னடத்திலும், ஆடையின் ஒரு பகுதி, எனும் பொருளில் “சிந்தி” என்ற வடிவிலும் தமிழில் கொடி எனும் பொருளில் “சிந்து” என்ற வடிவிலும் வழங்கும் சொல்லின் திரிபே ஆகும். அது, “சிந்தி” என்ற வடஇந்திய ஆற்றின் பெயரினின்றும் பிறந்ததும் ஆகாது. பர்ஷியா வழியாகச் சென்ற வணிகர் கொண்டு சென்றதும் அன்று. கடல் வழியாகச் சென்ற தமிழ் வணிகரே, அவ்வாடையையும், அச்சொல்லையும் தமிழகத்தினின்றும் நேரே கொண்டு சென்று, ஆங்கு வழங்கியிருத்தல் வேண்டும். பர்ஷிய