பக்கம்:தமிழர் வரலாறு 1, பி. டி. சீனிவாச அய்யங்கார்.pdf/162

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

தொல்காப்பியர் காலம்

137

வழியாகச் சென்றதாயின், அந்நாட்டு மக்கள் ஒலிப்பில், “சகரம்” 'ஹகரமாக மாறும் இயல்பிற்கு ஏற்ப, “சிந்து” என்ற சொல். 'ஹிந்து' என ஆகியிருக்க வேண்டும். ஆனால், அது, அவ்வாறு திரியாது, தமிழில் உள்ளவாறு, “சிந்து” என்றே ஒலிக்கப் பெறுகிறது. ஆகவே, அது, தமிழ்ச்சொல்லே: தமிழ் நாட்டினின்றும் சென்றதே என்பதை உறுதி செய்யும்”.

“Indian teak was found in the ruins of ur, which was the capital of the Sumerian Kings in the IV millennium B. C, and the other is that the word “Sindhu” of muslin is mentioned in an ancient Babylonian list of Clothing. The occurrence of “s” in the word, proves, that this musliń did not go to Mesopotamia, via Persia, for, then “S” would have become “H” in persian mouths... ... I there fore conclude that muslin went direct by sea from the tamil coast to persian coast and the Babylonian word “Sindhu" for muslin, is not derived from the name of the river, but from the old Dravidian word “Sindi”, which is still found in Tulu and Canarese, and means, a piece of cloth, and is represented by the Tamil word “Sindhu” a flag”. (pages: 88, 39)

ஆக, இவ்வாறெல்லாம் கூறியிருப்பதன் மூலம், கிருஷ்ணனோடு, பலதேவனையும் வழிபடும் வழிபாட்டு நெறி, கி. மு. இரண்டாம் நூற்றாண்டில், தமிழகத்திலிருநது அர்மினியாவுக்குச் சென்றதையும், தமிழ்நாட்டு அரிசி, கருவாப்பட்டை, இஞ்சிவேர், வைடுரியங்கள், கிரேக்கநாட்டிற்குக் கி.மு. 500இல் சென்றதையும், அவற்றைக் குறிக்கும். “ஒரயஸ்”, “கார்பியன்”, “ஜிக்கிபெரோஸ்” “பெரியலோஸ்” என்ற கிரேக்க மொழிச்சொற்கள், முறையே, அரிசி, கருவா,இஞ்சிவேர், வைடுரியம் என்ற தமிழ்ச்சொற்களின் திரிபாம் என்பதையும், தமிழ்நாட்டு மயிலும், அகிலும் பாலஸ்தீனிற்குக், கி. மு, பத்தாம் நூற்றாண்டில் சென்றதையும், அவற்றைக் குறிக்கும் “துக்கி,” “அகல்” என்ற அம்மொழிச்