பக்கம்:தமிழர் வரலாறு 1, பி. டி. சீனிவாச அய்யங்கார்.pdf/165

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

140

தமிழர் வரலாறு

ஆக, இவ்வகையால், கி. மு. 4000 தொடங்கி, கி. மு. 200 வரையான காலத்தில் தமிழ்ச் சொற்கள், மேலைநாடுகளுக்கும் வடநாட்டிற்கும் சென்று, அம்மொழிகளில் இடம் பெற்று விட்டமைக்குத்தான் சான்றுகள் உள்ளனவே ஒழிய, அக்கால அளவில், அம்மேலைநாட்டு மொழிச்சொற்களோ வடநாட்டுச் சொற்களோ தமிழகம் வந்து தமிழில் இடம் பெற்றமைக்கான சான்று எதுவும் இல்லை என்ற இவ்வுண்மையையும் ஏற்றுக்கொண்டுள்ளார் திருவாளர் அய்யங்கார் என்பது உறுதியாகிறது.

இவ்வுண்மைகள்வழி கொண்டால், “ஓரை” என்பது, தனித் தமிழ்ச் சொல். அது, கி. மு. ஐந்தாம் நூற்றாண்டில் கிரேக்கம் சென்று, அம்மொழியில், ஹொர என வழங்கிய அம்மொழிச் சொல், காந்தாரம் முதலாம் நாடுகள் வழியாகப் பயணம் செய்து, கி. பி. முதலாம் நூற்றாண்டில் தமிழ்நாடு வந்தடைந்து, தமிழில் “ஓரை” எனத் திரிந்து வழங்கலாயிற்று என்பது உண்மையொடு பட்டதாகாது எனக்கொள்வதே முறையாகும்.

ஆகவே, தமிழ் ஒரை, கிரேக்க மொழி “ஹொர” என்பதன் திரிபாம் என்ற அய்யங்கார் அவர்களின் கூற்றோ அது கொண்டு, தொல்காப்பியரைக், கி. பி. முதல் நூற்றாண்டிற்குக் கொண்டுவந்து நிறுத்தும் அவர் முடிவோ ஏற்றுக்கொள்ளத் தக்கன ஆகா.

தொல்காப்பியர், கி. பி. முதல் நூற்றாண்டிற்கு முன்னர் வாழ்ந்திருக்க இயலாது என்பதற்குத், திரு. சீனிவாச அய்யங்கார் கூறும் இரண்டாவது காரணம் பின்வருமாறு:-

“தொல்காப்பியப் பொருளதிதாரம் ஏழாவது இயல், 189, 190, 197 எண்ணிட்ட சூத்திரங்களில், தலைவன் தலைவியர்கனின் காதல் வாழ்க்கைக்குத் துணைபுரியும் பாங்கனில் பார்ப்பனப் பாங்கனும் கூறப்பட்டுள்ளான். ஆகவே, பார்ப்பனர்கள், காதல் நெறியில் பெருந்தோழர்களாகப் பணிபுரிந்ததைத், தொல்காப்பியர்