பக்கம்:தமிழர் வரலாறு 1, பி. டி. சீனிவாச அய்யங்கார்.pdf/166

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

தொல்காப்பியர் காலம்

141

கருத்தில் கொண்டுள்ளார் எனத் தெரிகிறது. ஆனால், அஃது ஒருசமஸ்கிருத் நாடக மரபு".

("Chief among the "Pangat", companions of a Chief and his helpers, in his love-campaigns, Tolkappiyanar names the “Parppar”. Brahmanas. Thus Tolkappiyanar Contemplates the employment of Brahmānas as chief ministers of love. This was a convention of the Sãnskrit Drama". (page 217.)

"அகநானுறு, புறநானூறு, குறுந்தொகைகளில் பார்ப்பனர், பதினாறுக்கும் மேற்பட்ட இடங்களில் குறிப்பிடப்பட்டிருந்தாலும், அங்கெல்லாம், அரிதின் பேணிப் போற்றப்படவேண்டிய சான்றோர் என்பது போலும் வேறு. நிலைகளில்தான் குறிப்பிடப்பட்டுள்ளனரே யல்லாமல், தலைவன் தலைவியர்க்குள் காதல் வாழ்க்கையில் துணை போகும் பாங்கனாம் நிலையில் கூறப்பட்டிலர். ஆகவே, தொல்காப்பியர், இதைத் தமிழர் பழக்கவழக்கங்களையொட்டி மேற்கொண்டாரல்லர்: சமஸ்கிருத நாடக மரபையொட்டியே மேற்கொண்டுள்ளார். ஆகவே, அவர் சமஸ்கிருத மொழியில், நாடக மரபுகள் நன்கு வளர்ந்து விட்ட காலத்திற்குச், சிறிது பிற்பட்ட காலத்திலேயே வாழ்ந்திருக்க வேண்டும்."

"The word parppar occurs four times in puram; there are ten other references to andanar or to their lore. But these alloude to their vedic schalorship, their sacrificial fire, the gifts received by them, but not to their services as goblet weens... As Tolkappiyanar has transferred this convention from sanskrit drama to Tamil poetry, he must have lived sometimes. after the formal drama was developed in Sanskrit". (Page :217–218).

"சமஸ்கிருத இலக்கியத்தில் நாடக மரபுக்கு வழி வகுத்தவர், அம்மொழிமுதற் புலவர் 'ப்ஹாஸர்' ஆவர். அவர், கி. மு. மூன்றாம் நூற்றாண்டிற்கு முன்னர் வாழ்ந்