பக்கம்:தமிழர் வரலாறு 1, பி. டி. சீனிவாச அய்யங்கார்.pdf/167

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

142

தமிழர் வரலாறு

திருக்க இயலாது. அச் சமஸ்கிருத நாடக மரபு, தென்னாடு அடைந்து தொல்காப்பியத்தில் இடம் பெறுமளவு, தமிழகத்தில் செல்வாக்குப் பெற, மேலும் சில நூற்றாண்டு. காலம் கழிந்திருக்க வேண்டும்." இவை, திரு. அய்யங்கார் அவர்களின் வாதம்.

"Bhasa” is our earliest Sanskrit poet and he can not belong to an age, earlier than the IlI century B.C., and it must have taken some time for the literary convention of the 'Sanskrit Drama to reach south India, to enable Tolkappiyanar to include it in his grammar". (Page : 218). -

இலக்கியம் கண்டதற்கு இலக்கணம்; இதுவே மரபு. தமிழ்மொழி, தமிழர் வாழ்வு பற்றிய இலக்கணத்தை வகுத்தவர் தொல்காப்பியர். ஆகவே, அதில், அவர், அது எழுதுவதற்கு முற்பட்ட காலத்தில், தமிழ் மொழியில் நிலவிய, தமிழர் வாழ்க்கையில் இடம்பெற்றுவிட்ட மரபுகளுக்குத்தான் இலக்கண வடிவம் கொடுத்திருப்பரேயல்லாது, பிற மொழி, பிறமொழியினர், மரபுகளைக் கருத்தில் கொண்டிருப்பாரல்லர். "செந்தமிழ் நிலத்து வழக்கொடு சிவணி" என்றுதான் பாயிரமும் கூறுகிறது.

பார்ப்பனப் பாங்கர்கள், தமிழகத்துத் தலைவன் தலைவியர் தம் காதல் வாழ்க்கைக்குத் துணைபுரிந்து, அது அக்காலத்தமிழ்ப் பாக்களில் இடம் பெற்றிருக்க வேண்டும். அதனாலேயே, தொல்காப்பியர், அதற்கு இலக்கண வடிவம் கொடுத்திருக்க வேண்டும். அம்மரபு, பிற்காலத்தே வழக்கிறந்து போக, அக்காலத்தில் எழுந்த தமிழ்ப் பாக்களில், அது இடம் பெறாது போயிருக்கு வேண்டும். தொல்காப்பியர் காலத்தே இருந்து, தொல்காப்பியரால் இலக்கண வடிவம் கொடுக்கப்பட்டுப், பின்னர் வழக்கிறந்து போனது இஃது ஒன்று மட்டுமன்று. அந்நிலைக்குத் தள்ளப்பட்டவை இன்னமும் எத்தனையோ உள்ளன, தொல்காப்பியத்திற்கு உரை கண்ட இளம் பூரணரும், நச்சினார்க்கினியாரும், அத்தகு இடங்களில், "இவ்வழக்கம் பிற்காலதே வழக்கிறந்தன