பக்கம்:தமிழர் வரலாறு 1, பி. டி. சீனிவாச அய்யங்கார்.pdf/169

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

144

தமிழர் வரலாறு

பார்ப்பனப் பாங்கன் பற்றிய குறிப்பு, எட்டுத்தொகை நூல்களில் இடம் பெறவில்லை என்ற திரு. அய்யங்கார் சுற்றிலும் உண்மை இல்லை.

கணவன், பரத்தையர் தொடர்புகொண்டு ஒழுக்கம், கெட்டு அலைகின்றான் என்பதறிந்து, அவன் மீது கடுஞ்சினம் கொண்டிருப்பாள் ஒரு கற்பு நிறை மனைவிபால் சென்று, அவள் சினம் போக்கிக் கணவனை ஏற்றுக் கொள்ளச் செய்வான் வேண்டி, அவள்பால், அவள் கணவனின் புகழ்களை, அடுக்கடுக்காக எடுத்துக் கூறும் அந்தணப் பாங்கன் ஒருவன். கவித்தொகையில் காட்சி அளிக்கின்றான்: "வெறிது நின் புகழ்களை வேண்டார் இல் எடுத்து ஏத்தும் அறிவுடை அந்தணன்" (மருதக்கலி:7:17-18) இவன், திரு. அய்யங்கார் அவர்கள் கண்களில் பட்டிலன்.

ஆனால், தன் உள்ளம் கவர்ந்த ஒருத்தியை, அதே போல் அவள் உள்ளத்தைத் தன்பால் பறிகொடுத்துக் தவிக்கும் ஒருத்தியை அடையமாட்டாக் காதற்பெருந்துயரால் கலங்கிக் கருத்திழந்து கடமை மறந்து கிடந்தான் ஒர் இளைஞன். அவனுக்கு ஒரு பார்ப்பனத் தோழன். பார்ப்பன குலக்கோலமாம் தண்டு கமண்டலத்தோடு காட்சி அளிப்பவன்; விரத நாட்களில் உண்ணாது இருந்து விரதம் காத்துப் பின்னரே உண்ணும் ஒழுக்க நெறியில் நிலைத்து நிற்பவன். எழுதப் படாதது என்ற பெருமைக்கு உரியதான நால்வேதங்களை முறையாகக் கற்றுணர்ந்தவன். அவன், தன் நண்பன் காதல் நோயால் கருத்திழந்து கடமை மறந்துகிடப்பது காணப் பொறாது அவனுக்குச் சிலபல அறிவுரைகளை வழங்கினான். ஆனால், காதல் மயக்கத்தில் ஆழ்ந்து போய்விட்ட இளைஞன், பார்ப்பன நண்பனின் அறிவுரையினை ஏற்க மறுக்கும் முகத்தான், நால்வேதம் கற்ற அவன் அறிவுத்திறனைப் பாராட்டி விட்டு, "நண்பனே! நீ, இவ்வாறெல்லாம் எனக்கு அறிவுரை கூறுவதை விடுத்து, நீ கற்ற அந்த வேதத்தில், என்னையும், என் காதலியையும் போலப் பிரிந்து துயருற்றுக் கிடக்கும் இளம் காதலர்களை ஒன்றுபடுத்தும் திறம் வாய்ந்த