பக்கம்:தமிழர் வரலாறு 1, பி. டி. சீனிவாச அய்யங்கார்.pdf/171

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

146

தமிழர் வரலாறு

ஏழாம்.நூற்றாண்டிற்கும் முற்பட்டவராவர் எனக் கூறப் படும் ஒரு கருத்து நிலவுவதை அறிந்திருந்தும், அதை மறுத்து ஒரு சொல்லும் கூறினாரல்லர்,

"பெரும்பாலான ஐரோப்பிய திறனாய்வாளர்கள், பாணினி, கி. மு. நான்காம் நூற்றாண்டில் வாழ்ந்தவர் என்ற தப்பான கொள்கையிலிருந்து விடுபட்டிலர். திருவாளர்கள் கோ ல் டு ஸ் ட க் க ர் , அவர்களும், ஆர். வி. பந்தர்கார் அவர்களும், அவருடைய காலம், கி. மு. ஏழாம் நூற்றாண்டு என்பதற்கான எண்ணற்ற சான்றுகளைக் கொடுத்துள்ளனர்."

"Most European scholars have not yet released themselves from the prejudiced view, that Panini lived in the IV Century B.C. though Goldstrucker and Sir R. B. Bhandarkar have smashed all the arguments in favour of this view and have given number of proofs, which establish his age as the VII century B.C.,’, (Page : 116)

"கி. மு, ஏழாம் நூற்றாண்டில் புகழ் பெற்றிருந்தவராக நான் கருதும் பாணினி, நர்மதை ஆற்றிற்குத் தெற்கில் உள்ள நாடு எதையும் குறிப்பிடவில்லை."

"Panini, who, as I think, flourished in about the VII century B.C. makes no mention of any province to the south of Narmada". (Page: 123)

"பாணினிக்குச் சில நூற்றாண்டுகள் கழித்து, பெரும்பாலும் கி. மு, நான்காம் நூற்றாண்டில் காத்தியாயனர் வாழ்ந்திருந்தார்."

"A few centuries after Panini, perhaps in the IV century B.C. lived Katyayana" (Page: 135)

மேலே கூறியிருப்பன அனைத்தும், திருவாளர் பி. டி. சீனிவாச அய்யங்கார் அவர்களின் கருத்துகளாம். இவ்வாறெல்லாம் கூறுவதன் மூலம், பாணினி, கி. மு ஏழாம்