பக்கம்:தமிழர் வரலாறு 1, பி. டி. சீனிவாச அய்யங்கார்.pdf/173

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

148

தமிழர் வரலாறு

வாழ்ந்தவராதல் வேண்டும்." என்று கூறுகிறார் திருவாளர் எம். சீனிவாச அய்யங்கார். இது ஒரு காரணம்.

In the colophon to the Tolkappiyam, the author says, that he has mastered the Sanskrit grammar of Indra-ஐந்திரம் நிறைந்த தொல்காப்பியம்- when the epoch-making work of Panini, had long been considered, the highest authority on the subject in sanskrit, why Tolkappiyanar should study and follow Indra's work in his grammar of the Tamil language is inexplicable, unless it be, that Panini was not known to the southern Hindus of Tolkappiyar time. One of the sixty-four predecessors, quoted by panini in the field of grammatical science was Indra, and he should therefore have flourished before him. Thus, Tolkappiyar must have lived anterior to B.C. 350, which is the date assigned to Panini, by the best-authorities.” (Tamil studies : Page : 117)

"லளஃகான் முன்னர் யவவும் தோன்றும்"
"ஞநமவ என்னும் புள்ளி முன்னர்
யஃகான் நிற்றல் மெய்பெற் றன்றே"
"மகான் புள்ளி முன் வவ்வும் தோன்றும்".

-தொல் : எழுத்து:24, 27, 28,

என்ற சூத்திரங்களிலிருந்து, தொல்காப்பியர் காலத்தில் ல்ய, 'ள்ய, ஞ்ய, ந்ய, ம்ய, வ்ய, ம் வ என்பன போலும் மெய்ம் மயக்கங்களை இடையில் கொண்ட சொற்கள் வழக்கத்தில் இருந்திருக்க வேண்டும் எனத் தெரிகிறது. அச் சூத்திரங்களுக்கு உரை எழுதிய நச்சினார்க்கினியார், "இங்ஙனம் ஆசிரியர் சூத்திரம் செய்தலின். அக்காலத்து ஒருமொழியாக வழங்கிய சொற்கள் உளவென்பது பெற்றும், அவை இக்காலத்து இறந்தன" எனக் கூறியுள்ளார். இவை போலும் சொல் எதுவும், இன்றைய தமிழ் இலக்கியங்களில் இடம் பெறவில்லை. கி. பி. முதல் நூற்றாண்டைச் சேர்ந்ததான திருக்குறளிலும், அவை இடம் பெற்றில. ஆகவே, அத்தகைய சொல்லாட்சி, திருக்குறள் காலத்துக்குக் குறைந்தது, 300