பக்கம்:தமிழர் வரலாறு 1, பி. டி. சீனிவாச அய்யங்கார்.pdf/175

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

150

தமிழர் வரலாறு

தமிழர் வரலறு (History of Tamils) 512 ஆம் பக்கத்தில், "மணக்கிள்ளியை, நெடுஞ்சேரலாதனின். உடன் பிறந்தாள் கணவனாகக் கொண்டு, அவிழ்க்க இயலா முடியைத், தைரியமாக அவிழ்க்க முயன்றுள்ளார். திரு. எம். சீனிவாச அய்யங்கார்"

(Mr. Srinivasa Aiyangar boldly attempted to cut the guardian. knot by taking Manakkilii, as Nedunjerals 'sister's husband") எனக் கூறியிருப்பது காண்க.

திறனாய்வு நிலையில், ஒரு பொருள் பற்றி, ஒருவர், ஒரு முடிவினை நிலைநாட்ட முயலும்போது, அதற்குத் துணை நிற்கும் சான்றுகளை அடுக்கடுக்காக எடுத்து வைப்பதைக் காட்டிலும், அம்முடிவிற்கு மாறாக எடுத்து வைக்கப்படும் சான்றுகளைத், தக்க காரணம் காட்டி மறுக்க வேண்டியது. தலையாய கடமையாகும். தருக்க முறையில், இதைப், "பிறன் கோள் மறுத்துத் தன் கோள் நிறுவுதல்" என்ப.

தொல்காப்பியர், கி. பி. முதல் நூற்றாண்டிற்கு முற்பட்டவராகார் என்பதை நிலை நாட்ட முயலும் திருவாளர் பி. டி. சீனிவாச அய்யங்கார் அவர்கள், தொல்காப்பியர், கி.மு. 350க்கு முற்பட்டவராவர் என்பதை நிலை நாட்ட, திரு. எம். சீனிவாச அய்யங்காரவர்கள் எடுத்து. வைக்கும், மேலே கூறிய, வலுவான இரு சான்றுகளை மறுக்க வில்லை. திரு. எம். எஸ் அவர்கள் அம்முடிவு கொண்டுள்ளார் என்பதை அறிந்திருந்தும், அதை மறுக்காமை மட்டு மன்று; அவ்வாறு ஒரு கருத்து நிலவுகிறது என்று தானும் குறிப்பிடவில்லை. அதை மறுப்பதற்கான காரணத்தைத் திரு. பி. டி. எஸ் அவர்களால் காண இயலவில்லை என்பதே. அதற்குப் பொருளாம்.

தொல் காப்பியரைக், கி. பி. முதல் நூற்றாண்டிலேயே நிறுத்த, திரு. பி. டி. எஸ். அவர்கள் தேடிப்பிடித்த, தமிழ் "ஓரை"யும் அவர்க்குத் துணை புரியவில்லை; தலைவன்