பக்கம்:தமிழர் வரலாறு 1, பி. டி. சீனிவாச அய்யங்கார்.pdf/18

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

14

13. கண்ணகிக்குச் செங்குட்டுவன் எடுத்த விழாவிற்குக் கடல் சூழ் இலங்கைக் கயவாகு வேந்தனும் வந்திருந்தான் எனச் சிலப்பதிகாரம் கூறுவது கொண்டு, கயவாகு வேந்தனை வைத்துச் செங்குட்டுவன் காலத்தை உறுதி செய்வது பொருந்தாது.

Not can Senguttuvan's date be fixed by the so called Gajabahu synchronism. page : 379

14. கரிகாலன் பெயர் குறிப்பிடும் அவனைத் தொடர்பு படுத்தும் சிலப்பதிகாரப் பகுதிகள் அனைத்தும், அவன் காலம் சிலப்பதிகார நிகழ்ச்சிக் காலத்துக்கு முந்தியனவாகவே காட்டுகின்றன. ஆகவே, கரிகாலன் காலம், செங்குட்டுவன் காலத்தைக் கொண்டு உறுதி செய்வது இயலாது.

All the passages of Silappadikaram, which name or allude to Karikal prove that his age proceeded the time when the events of the story began, aud hence Karikal's date can not be deducad from Senguttuvan's. page : 379

15. பதிப்பாசிரியரால், புறநானூற்றுப் பாக்களின் அடியில் இணைக்கப்பட்டிருக்கும் கொளுக்கள், மரபுவழி உண்மைச் செய்திகளைக் கொண்டிருப்பன அல்ல. கட்டுக்கடங்கா வெறும் கற்பனைகளே என்பது உண்மை.

It is evident that some of the colophons appended to the posms by the editor, do not embody tradition but contain guesses, sometimes wild.” page:410

16: நெடுஞ்சேரலாதன், சேரநாட்டின் வடஎல்லைக்கு அப்பால் சில கல் தொலைவிலேயே உள்ள கதம்ப நாடு அல்லது கொண்கானம் வரையே சென்று, சில திறைப் பொருள்களோடு திரும்பிய செயலைப், புலவர்கள், பரிசில் பெறும் ஆசையால், இமயம் வரை சென்று வெற்றி கொண்டதாகப் பாடிப் புகழ்ந்ததோடு, அவனுக்கு இமய வரம்பன் என்ற பட்டத்தையும் சூட்டிவிட்டனர்.