பக்கம்:தமிழர் வரலாறு 1, பி. டி. சீனிவாச அய்யங்கார்.pdf/181

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

156

தமிழர் வரலாறு

விளக்கம் போலல்லாமல், இச்சாத்திர முடிவுகளெல்லாம், ஏறத்தாழ உருவம் அற்றவை.

5. வேதாந்தம் போன்ற பல்வேறு தத்துவ ஞான முறைகளின் கொள்கை விளக்கங்கள் அதாவது, வேதங்களின் கடைசி அத்தியாயங்களின் போதனைகள் பொருந்துற அழைப்பதானால் “வேதாசிரம்” அதாவது, உபநிஷதம், நியாயம், வைகேசிகம், எல்லாவற்றிற்கும் மேலாகச், சாங்கியம், யோகம் , மற்றும் ஆகமங்களின் இறுதி முறைகளின் இரண்டின் கொள்கை வளர்ச்சி. கடைசியில் கூறப்பட்ட சமய முறையில், மிகப்பெரிய முன்மாதிரி எடுத்துக்காட்டு பாகவதர்கள் வழிச் சமயதத்துவம் ஆனதும், ஏனைய சமயாசிரியர்களெல்லாம், உலகை உணர்ந்து, உளத்தால் பற்றிக்கொள்ள முயற்சிப்பதற்கு இடமான, ஒருவரின் ஆற்றல் எல்லைகளுக்கெல்லாம் அப்பாற்பட்ட பெருநோக்கு நிலையில் இடம் கொண்ட உலகம் கண்ட மிகப்பெரிய சமயாசிரியன், வேதாந்த காலத்திய சமய நெறிகளின் முரண்பட்ட உபதேசங்களை ஒரு முகப்படுத்தி: சரியாகச் சொல்வதானால், அறிவெல்லைக்கெல்லாம் அப்பாற்பட உயர்த்தியதுமான, பகவத்கீதை ஆகும்.

6. நிலஇயல் சார்ந்த பகுதிகள்: இவை, இந்தியாவின் பல்வேறு இடங்களைக் குறிப்பாக, தெய்வத் திருமேனிகளை நாடிச், சமய யாத்திரிகர்கள் சென்ற இடங்களைக் குறிப்பிடுகின்றன.

மகாபாரதத்தின், இக்கடைசிப் பகுதிகள், கி. மு. 1000க்கும் 500-க்கும் இடைப்பட்ட காலத்தில், பாக்களில் இடம்பெற்று, அந்த வீரகாவியத்தை, ஐந்தாம் வேதமாக மதிக்குமாறு உயர்த்திவிட்டன.

தென்னிந்தியாவும் பாரதப் போரும் :

மகாபாரதத்தின் உயிர் நிலையாகிய, போர்க்காதையில், தென்னிந்தியாவுக்கும், வடஇந்தியாவுக்கும் இடையில் அரசியல் உறவுகள் இருந்தன என்பதற்கான அகச்சான்று உளது. திரெளபதியின் சுயம்வரத்திற்கு வந்திருந்தவர்களில்