பக்கம்:தமிழர் வரலாறு 1, பி. டி. சீனிவாச அய்யங்கார்.pdf/186

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பாரதப் போர்

161

தன் தலைநகரைச் சார்ந்த ஒரு சோலையில் ஒரு நாகக் கன்னிகையைக் கண்டு காதல் கொண்டான். ஒரு திங்கள் கழித்து அவள் மறைந்துவிட்டாள். சிலகாலம் கழித்து அவள் அவர்களுக்குப் பிறந்த மகனைக் கம்பளச் செட்டி என்ற வணிகனின் கலம் வழி அனுப்பி வைத்தாள். ஆனால் கலம் கடலில் கரை அருகே கவிழ்ந்துவிட்டது. அது கேட்டு அரசன் மகனைத்தேடி அலைந்தான். அதனால், ஆண்டு தோறும் நிகழும் இந்திர விழாவை மறந்தான். அதன் விளைவால், தலைநகரைக் கடல் கொண்டது என்ற கதை கூறப்பட்டுளது. [மணிமேகலை:24:29-43:25:178-192 பூரிதத்த ஜாதகக் கதைகள்படி , கம்பளர், அஸ்லதரர் இருவரும் பழங்குடியினராவர். எண்:543] இக்கதைகள், கிழக்குக் கடற் கரையிலிருந்த நாகர் உலகத்திற்குக் கடல் வழித் தொடர்பு இருந்தது என்பதை உணர்த்துகின்றன.

நாகர் மொழி, தமிழ் அன்று ; ஆனால், ஒரு தமிழனால், அம்மொழியைக் கற்றுக்கொள்வது இயலாத ஒன்றன்று. அம்மொழி கற்றவன், சாதுவன் என்ற செட்டி, வங்கத்தொடு, கடல் வாணிகம் செய்யச் சென்று, சென்ற கலம் கவிழ்ந்து போக, நிர்வாண நாடோடிகளாம் நாகர் வாழும் கடற்கரையை அடைந்து, அவர்கள் மொழியைக் கற்றிருந்ததனால் உயிர் பிழைத்து, அவர்கள் அளித்த சந்தனக் கட்டை, மெல்லிய நூலாடை, அணிகளோடு திரும்பினான். [மணிமேகலை : 16 : 60 :- 6 I. அவர்பாடை மயக்கறு மரபின் கற்றனன் ஆதலின் இச்செய்திகளிலிருந்து நாம் பெறக்கூடிய இயல்பான முடிவு, இன்று மலபார் என அழைக்கப்படுவதே, தென்னிந்தியாவில் நாகர் நாடாம் என்பதே. நாகர் வழிபாடு பெருமளவில் இருக்கும் இந்தியாவின் ஒரு பகுதியாக, இன்றும் இருப்பது மலபார். மலபார் நாட்டின் முக்கிய இனத்தவரின் பெயராகும் “நாயர்” என்ற சொல், “நாகர்” என்ற சொல்லிலிருந்து பிறந்ததாதல் கூடும்: மேலும், ஏனைய, தென்னிந்தியப் பழங்குடியினரைப் போலவே, நாகர் பழங்குடியினரும், தலைமுழுவதும் மயிர் வளர்த்தனர், என நாம் கொள்ளலாம். கடவுளைப்

த. வ.-11